டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு ஆன்லைனில் இலவசப் பயிற்சி
நாமக்கல், ஜன.10- நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட் டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா பெருந் தொற்று காரணமாக நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2/ 2A மற்றும் குரூப் 4 தேர்வுகளுக் கான இலவச ஆன்லைன் பயிற்சிவகுப்பு புதிதாக அறி விக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு கள் ஜன.10 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்ப முள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது online classnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முக வரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து உள்ளே நுழைந்து போட்டித் தேர்வு என்பதை தேர்வு செய்ய வேண்டும். பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தேர்வுக்கு தயாராகிறோம் என்பதை தேர்வு செய்து அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதி விறக்கம் செய்யலாம். மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மாதிரி தேர்வினை ஆன்லைனில் எழுதலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளார்.
ரூ.8.50 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, ஜன.10- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கட் கிழமை தோறும் நிலக்கடலை ஏலம் நடைபெறுகிறது. அதன் படி இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 215 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,250 முதல் ரூ.7,600 வரையி லும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,050 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,750 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.8.50 லட்சத் திற்கு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 11 வியாபாரி கள், 30 விவசாயிகள் பங்கேற்றனர்.
குன்னத்தூரில் காவலர் பணியிடை நீக்கம்
அவிநாசி, ஜன.10- குன்னத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவ லர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் உட்கோட்டம், குன் னத்தூர் காவல் நிலையத்தில் முத்து பாண்டியன் (42). என்ப வர் தலைமை காவலராக 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் மீது வந்த புகாரின் அடிப் படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஒழுங்கு நடவடிக்கையாக, காவலர் முத்துபாண்டி யன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெறவுள் ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மின்தடை
உடுமலை, ஜன.10- உடுமலை தாலுகா, கிளு வன்காட்டூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை களில் பராமரிப்பு வேலை கள் நடைபெறுவதால் செவ் வாயன்று (ஜன.11) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவிந்தாபுரம், அம ராவதிநகர், செக்போஸ்ட், பெரும்பள்ளம், சாயபட் டரை, மானுப்பட்டி, சைனிக் பள்ளி, தும்பலப்பட்டி, ஆண் டியகவுண்டனூர், ஆலாம் பாளையம், கரட்டுமேடு, எலையமுத்தூர், கிளுவன் காட்டூர், குருவப்ப நாயக்க னூர், ஜக்கம்பாளையம், பெரிசனம்பட்டி மற்றும் குட்டியகவுண்டனூர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற் படும் என்று உடுமலை செயற்பொறியாளர் சதீஸ் குமார் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் எங்கே? யூனியன் வங்கிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி
திருப்பூர், ஜன.10- திருப்பூர் மாநகரப் பகுதியில் உள்ள யூனியன் வங்கியின் தானி யங்கி பணம் வழங்கும் ஏடிஎம் இயந் திரங்களில் தமிழ் மொழி இல்லா தது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள் ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன் யூனியன் வங்கியின் பிராந்திய மேலாளருக்கு அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது. திருப் பூர் மாநகர பகுதிகளில் அமைந் துள்ள யூனியன் வங்கி ஏடிஎம் இயந் திரங்களில் தமிழ் மொழி இடம் பெறா தது பற்றி வங்கி நிர்வாகத்தின் கவ னத்திற்கு ஏற்கனவே தெரிவித்திருந் தோம். மேலும், மார்க்சிஸ்ட் கட்சி யின் 23ஆவது மாநகர மாநாட்டி லும் தீர்மானம் நிறைவேற்றி வங்கி நிர்வாகத்திற்கு கவனப்படுத்தி னோம். அதன் ஒரு பகுதியாக திருப் பூர் குமரன் சாலை நகர மண்டபம் எதிரில் உள்ள யூனியன் வங்கி கிளை ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் மொழி பயன்பாட்டிற்கு வந்துள் ளது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் இந்த வங்கியின் வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்தி ரங்களில் தமிழ் மொழி இடம் பெற வில்லை. ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் தமி ழக மக்கள் பயன்படுத்தும் தானி யங்கி ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது வேத னையானது, ஏற்றுக் கொள்ள இய லாததாகும். தமிழைத் தாய்மொழி யாக கொண்ட மாநிலத்தில் தமிழ் தவிர்த்து வேறு மொழிகள் அறியாத மக்கள் வெகுவாக உள்ள நகரத்தில் தமிழ் முதல் பயன்பாட்டு மொழி யாக இருப்பதே வங்கி வாடிக்கை யாளர்களுக்கும் பயனளிக்கும். எனவே வங்கி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து வங்கியின் அனைத்து கிளைகளின் ஏடிஎம்-களி லும் தமிழ் மொழி இடம் பெறுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இந்த வங்கியின் அறி விப்பு பலகையிலும் தமிழ் இடம் பெறுவது வாடிக்கையாளர்க ளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் மீதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
சேவல் சண்டை - மூவர் கைது
அவிநாசி, ஜன.10- அவிநாசியை அடுத்து தொட்டக்களாம்புதூர் முள் ளுக்காட்டில் சேவல் சண்டை வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ராமநாதபு ரத்தை சேர்ந்த தமிழ்செல் வன், தங்கராஜ் மற்றும் சேவூரை சேர்ந்த பிரதீப் (20) ஆகியோர் சேவல் சண்டை வைத்து சூதாடியது தெரி யவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து மூவரை கைது செய்து காவல் துறையினர் கைது செய்த னர்.
மது விற்பனை – ஒருவர் கைது
அவிநாசி, ஜன.10- சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையத்தில் விற்பனை செய்வதற்காக வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேவூர் காவல் உதவி ஆய்வாளர் கள் கார்த்திக் தங்கம், சர்வேஸ்வரன், தனிப்பிரிவு காவலர் வெள்ளியங்கிரி ஆகியோர் ஞாயிறன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பிரபு (33) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதில், அங்கு 235 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிரபு மீது வழக்குப்ப திந்து கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 235 மதுபாட்டிகள், ரூ.40 ஆயிரத்து 100 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அரசின் நடமாடும் தேநீர் வாகனம் திருப்பூர் வந்தது
திருப்பூர், ஜன.10- தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான தேநீர் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனம் சார்பாக நடமாடும் தேநீர் வாகனங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் சென்னை யில் துவக்கி வைத்தார். இதையடுத்து திருப்பூர் மாவட்டத் திற்கான நடமாடும் தேநீர் வாகனங்கள் திங்களன்று திருப்பூர் மாவட்டம் வந்தடைந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த நடமாடும் தேநீர் வாகனத் தில் ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் தேநீர் வாங்கிப் பருகினர். பொதுமக்கள் அதி கம் கூடும் அரசு அலுவலகங்களுக்கு இந்த வாகனம் பயணிக் கும் என சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது
இளம்பிள்ளை, ஜன.10- கொங்கணாபுரம் அருகே பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போக்சோ சட்டத் தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 8 மற்றும் 6 வயதில் 2 மகள்கள் உள்ள னர். இவர்கள் இருவரும் அருகிலுள்ள ஊராட்சி ஒன் றிய துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலை யில், சனியன்று பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் (49) என்பவர், வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுமிகள் தனது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கொங்கணாபுரம் காவல் துறை யினர், கோவிந்தராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதன்பின், சங்ககிரி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்த னர்.
இலவச மனைபட்டா கேட்டு மனு
தருமபுரி, ஜன.10- இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தருமபுரி நியூ கால னியைச் சேர்ந்த பொதுமக் கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்த னர். தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக் குட்பட்டது நியூ காலனி. இப் பகுதியில் ஆதிதிராவிடர் இன மக்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் தினமும் கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு விவசாய நிலமோ, வீட்டு மனையோ இல்லை. எனவே, தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி நியூ காலனியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.