districts

img

ஆதரவற்றோருக்கு சிகை அலங்காரம்

திருப்பூர், ஆக. 3 - திருப்பூர் மாநகராட்சி தேசிய நகர்புற  வாழ்வாதார மையத்தில் தங்க வைக்கப் பட்ட ஆதரவற்றோருக்கு வியாழனன்று தன் னார்வ அமைப்பைச் சேர்ந்தோர் முடிதிருத் தம் செய்து உதவினர்.  அங்குள்ள ஆதரவற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், வயது முதிர்ந்தோர், மாற் றுத் திறனாளிகள் என பல்வேறு சூழ்நிலை களில் தங்களைப் பராமரிக்க இயலாதவர் களுக்கு நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பின் மூலம் முடி திருத்தம், முகச்சவ ரம் செய்து அவர்களது உடல்நலம் பேணிக்  காக்க உதவி செய்தனர். இப்பணியில் நியூ தெய்வா அறக்கட் டளை நிறுவனர் ந.தெய்வராஜ், செயலாளர் சிவகாமி, உறுப்பினர்கள் சந்தோஷ், ஹரி பிரசாத், நிஷாந்த் ஆகியோர் கலந்து கொண்ட னர்.