districts

img

புதிய நியாய விலை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

கோவை, பிப். 3- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய நியாய விலை கட்டிடம் கட்ட ரூ20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளியன்று நடை பெற்றது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாநக ராட்சி  6 ஆவது வார்டு, கருப்பராயன் பாளையம் பகுதியில், புதிய ரேசன் கடை கட்டிடம் அமைக்கப்பட வேண் டும் என அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து  வந்தது. இதுகுறித்து இப்பகுதி மக் கள் மற்றும் அரசியல் இயக்கத்தினர் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜ னிடம் கோரிக்கை மனுவை அளித்தி ருந்தனர். இதனையேற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ20 லட்சம் நிதியை பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான கடித பரிமாற்றங்கள் நிறைவடைந்து, புதிய நியாய விலை  கடை கட்ட ஒப்புதல் பெறப்பட்ட நிலை யில், இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு கோவை மாநக ராட்சி 6 ஆவது வார்டு மாமன்ற உறுப் பினர் பொன்னுசாமி தலைமை தாங் கினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கன கராஜ், செயற்பொறியாளர் திரு மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் மகேஸ்வரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.