districts

img

பாராசூட்டில் பறந்து, குதித்து அரசுக்கல்லூரி மாணவி சாதனை

உதகை, டிச.6- விமானப்படை விமானத் தில் 2 கி.மீ உயரத்தில் இருந்து வானில் பாராசூட் மூலம்  குதித்து உதகை அரசுக்கல் லூரி மாணவி சாதனை படைத் துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் ஊமை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சண்முகம் -  இளையராணி  தம்பதியின் மகள் கோகிலவாணி. இவர் நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலா வியல் துறை 3 ஆம் ஆண்டு படித்து வரு கிறார். இவருக்கு தேசிய மாணவர் படை யில் (என்.சி.சி) தீவிர ஆர்வம் இருந்த தால் அது சம்பந்தமான பயிற்சிகளில் பங் கேற்று வந்தார். இந்நிலையில், சமீபத் தில் தில்லியில் நடைபெற்ற தேசிய மாண வர் படை பாரா கேம்ப் பயிற்சியில் தமிழகத் தைச் சேர்ந்த 3 பேர் பங் கேற்றுள்ளனர். இதில்  தமிழகம் சார்பில் பங் கேற்ற ஒரே மாணவி யாக கோகிலவாணி இடம் பெற்றுள்ளார். பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ மீட் டர் உயரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து  சாகசப் பட்டியலில் இடம் பிடித்திருக்கி றார். இதுகுறித்து 31 ஆவது தமிழ்நாடு  தனிப்பிரிவு என்சிசியின் தலைமை அதி காரி சீனிவாஸ் கூறுகையில், உதகை அரசு கலைக் கல்லூரியில் 31 தமிழ்நாடு தனிப்பிரிவு என்சிசி மூலம் செயல்படும் தேசிய மாணவர் படையில் 100 மாண வர்கள் இந்திய ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய மாணவர் படை யில் இந்திய அளவில் பல்வேறு சாகச  முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. ஆக்ராவில் கடந்த மாதம் நடை பெற்ற பாரா முகாமில் தமிழகத்திலி ருந்து 3 பேர் தேர்வாகினர். அதில் 2 மாண வர்கள், மற்றும் மாணவி கோகிலவாணி தேர்வாகினர். தமிழ்நாடு சார்பில் பங் கேற்ற ஒரே மாணவி இவர்தான், என் றார். பாராசூட்டில் பறந்து, குதித்து சாதனை புரிந்த மாணவி கோகிலவாணிக்கு, பெற் றோர், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும். அவரது சாத னையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உதகை அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை யினர் லெப்டினன்ட் விஜய் தலைமை யில் பறிற்சி பெற்று வருகின்றனர்.