districts

img

பெண்களை பாதுகாக்கத் தவறும் பாஜக அரசு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 27 -  மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் கொடூர சித்ரவதைகளை அனுபவிக்கும் நிலையில் அதைக்  கட்டுப்படுத்தத் தவறிய பாஜக அரசைக் கண்டித்து திருப்பூ ரில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். வியாழனன்று காலை திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம், ஏஐபிடிபிஏ, ஒப்பந்தத் தொழிலா ளர் சங்கம், பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர். மணிப்பூ ரில் மீண்டும் அமைதியை நிலை நிறுத்தக் கோரியும், பெண்க ளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கக் கோரியும் முழக் கங்கள் எழுப்பப்பட்டன. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கக் கிளை  தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விஸ்வநா தன் கோரிக்கை முழக்கம் எழுப்பினார். கிளைச் செயலாளர்  குமரவேல், பழனிவேல்சாமி, சங்கிலிதுரை உள்ளிட்டோர் கோரிக்கைகளின் நியாயத்தை விளக்கிப் பேசினர். முடிவில்  கனகராஜ் நன்றி கூறினார்.