districts

img

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக

கோவை, பிப்.8– ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடன டியாக நிரப்பக்கோரி கோவையில் ஆசிரி யர்கள் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சங்கர் நகர் மற்றும் முத்துக்கல்லூர் ஆகிய தொடக்கப் பள்ளி யில் தலைமையாசிரியர் பணியிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலி யாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி  அலுவலர்கள் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும், இதுவரை தீர்வு எட்டப் படவில்லை. இந்நிலையில், கோவை ராஜ வீதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி யில் ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெற்று  வரும் நிலையில், கலந்தாய்வு அறையில் தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையில் ஆசிரியர்கள்  தரையில் அமர்ந்து திடீர் உள்ளிருப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி யின் ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செய லாளர் தங்கபாசு கூறுகையில், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கடந்த மூன்று வருடங் களாக நிரப்படவே இல்லை. தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பணியி டங்களும் காலியாக உள்ளன.  இதனை உட னடியாக நிரப்ப வேண்டும். தற்போது  தலைமை ஆசிரியர்கள் இல்லாத காரணத் தால், பள்ளி நிர்வாகத்தில் பெரும் சிரமம்  ஏற்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு உண்டான அனைத்து தேவைகள், கோரிக்கைகளை பொறுப்பு ஆசிரியர்கள் மேற்கொள்வதில்லை. இதனால் உட னுக்குடன் எடுக்க வேண்டிய அனைத்து  கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. இதன்காரணமாக மாண வர்களின், கல்வி பாதிக்கப்படுவதுடன்,  பொறுப்பு ஆசிரியர்களின் பணிச்சுமை யும் அதிகரிக்கின்றது. எனவே, கோவையில் உள்ள அனைத்து  அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் காலிப் பணியிடங்களையும், தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு உடனடியாக தலைமை ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். எங்களின் நியாயமான கோரிக் கைகளுக்கு மாவட்ட கல்வி துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இது போன்ற போராட்டங்களை தொடர்ந்து மேற் கொள்வோம், என்றார்.