கோவை, ஆக.27- மோட்டாரில் சிக்கி துண்டான குழந்தை யின் விரலை, மைக்ரோஸ்கோப் மூலம் அறுவை சிகிக்சை செய்து மீண்டும் விரலை இணைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர். கடந்த ஆக.23 ஆம் தேதியன்று பொள் ளாச்சி, சிஞ்சிவாடி பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் மூன்று வயது குழந்தை தன்னுடைய விரலை, மோட் டாரில் உள்ளே வைத்ததினால் வலதுகை கட்டை விரல் இரண்டு துண்டாகியுள்ளது. இதையடுத்து விபத்து ஏற்பட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, பெற்றோர் குழந்தையை பொள் ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவம னைக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மீராவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து விரலை மீண்டும் சேர்ப்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறுவை அரங்கு தயார் செய்யப்பட்டது. மருத்துவ மனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை யில், அறுவை சிகிச்சை துறை தலைவர் கார்த்தி கேயன், ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை நிபு ணர் சங்கமித்ரா ஆகியோர் எட்டு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை தொடர்ச்சியாக செய்தார். அவருடன் அறுவை சிகிச்சை துறை பட்ட மேற்படிப்பு மாணவி மணிமேகலை இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டார். முதலில் கே ஒயர் மூலம் விரலை இணைத்து இதற்குப் பின் ரத்தக்குழாய்கள் இணைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடி வில் விரலுக்கு ரத்த ஓட்டம் வருவது கண்டு பிடிக்கப்பட்டு, குழந்தை அறுவை சிகிச்சை பகுதியில் சிகிச்சைக்குப் அனுமதிக்கப்பட் டது. குழந்தையின் கட்டைவிரல் எப்படி நல்ல நிலைக்கு திரும்புகிறது என்று மூன்று நாள் மற்றும் ஒரு வாரம் கழித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பிறகு, தற்போது குழந்தை நல்ல நிலையில் உள் ளது. கண் அறுவை சிகிச்சைக்கு உபயோ கப்படுத்தும் மைக்ரோஸ்கோப் மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது. இந்த அறுவை சிகிச்சை முதல் முறையாக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பொள்ளாச்சி அரசு மருத்துவம னையில் அடிபட்ட இடத்திற்கு தோல், தசை அறுவை சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப் பட்டு வந்தது என்பது குறிபிடதக்கது.