திருப்பூர், நவ 23- திருப்பூர் மாவட்டம், மாணிக்காபுரம் ஊராட்சியில் பல ஆண்டு காலம் அரசு பேருந்து வசதி இல்லாததை கண்டித்து, இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந் திய மாணவர் சங்க சார்பில் பல்லடம் சிடிசி டிப்போவை முற்றுகையிட போவதாக அறி வித்ததையடுத்து அரசு பேருந்து இயக்கப்பட் டது. மாணிக்காபுரம் ஊராட்சி பகுதியில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பள்ளி, கல்லூரி சென்று வர வும், வேலைக்கு சென்று வரவும் இந்த பகுதி யில் உள்ள மாணவர்கள், பெண்கள் பொது மக்கள் எல்லோரும் பல்லடம் நகருக்கு சென்று வரவேண்டியுள்ளது. இந்த பகுதி யில் இத்தனை ஆண்டு காலம் அரசு பேருந்து வசதி இல்லாததால் தனியார் பேருந்துகளை நம்பி இருக்க வேண்டியிருந்தது. கொரோ னாவுக்கு பிறகு லாபம் இல்லை என்பதை காரணம் காட்டி தனியார் உரிமையாளர்கள் மினி பேருந்து இயக்கத்தை நிறுத்தி கொண் டனர். இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத் தின் மாணிக்காபுரம் ஊராட்சி கிளைகள் சார் பில் பல்லடம் சிடிசி அலுவலகத்தில் இரு முறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் நடவ டிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணிக்காபுரம் ஊராட்சி முழுவ தும் உள்ள மக்களை வீடு வீடாக சந்தித்து 5000 கையெழுத்துக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை நேரில் சந் தித்து மனு கொடுத்தனர்.
இரு மாதங்களா கியும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் நவ.23 ஆம் தேதி காலை 10மணிக்கு பல்ல டம் சிடிசி டிப்போவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்லடம் காவல்துறை மற் றும் சிடிசி மேலாளரோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையில், தினசரி காலை 7 மணிக்கு ஒரு அரசு பேருந்து பல்லடத்திலிருந்து மாணிக்காபுரம் வழியாக திருப்பூர் செல்லும் வகையில் இயக்குவதாகவும், இன்னும் ஒரு வார காலத்தில் பல்லடம் முதல் மாணிக்கா புரம் சென்று வர பேருந்து இயக்கிட உறுதி செய்கிறோம், என்று உத்தரவாதம் அளித்த னர். இதையடுத்து புதனன்று நடைபெற விருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், மேலும் ஒரு வார காலத் திற்கு பிறகும் பேருந்து இயக்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர். மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரவீன் குமார், வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் தினகரன், மாணிக்காபுரம் எ. கிளை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் முருகேஷ் , பி. கிளை செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணிக்கா புரம் பகுதிக்கு வந்த அரசு பேருந்தை மலர் தூவி வரவேற்றனர்.