ஈரோடு, அக்.29- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்க 50 ஆவது பொன்விழா ஆண்டு மண்டல மாநாடு ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி யில் அமைந்த சென்னகேசவலு நினை வரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. மண்டல தலைவர் கே.பத்மநாபன் தலைமை வகித்தார். மூத்த உறுப்பி னர் பி.ஜி.கிருஷ்ணன் கொடியேற்றி னார். மண்டல துணைத்தலைவர் பி. பாஸ்கரன் இரங்கல் தீர்மானம் வாசித் தார். மாநில செயற்குழு உறுப்பி னர் எம்.தங்கவேல் வரவேற்றார். மண் டல செயலாளர் ஜி.அந்தோணிவளன் அறிக்கை சமர்ப்பித்தார். தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் முன் னாள் உதவித்தலைவர் ஆர்.இளங் கோவன் பேரூரையாற்றினார். டான் சாக் மாநிலத் தலைவர் எல்எம்ஒய்.ஏஜாஸ், பொதுச்செயலாளர் கே. ஷெரிப், பொருளாளர் எம்.ராஜ்குமார் உட்பட பலர் வாழ்த்துரையாற்றினர். இம்மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமலாக்க வேண் டும். அரசாணை 390யை ரத்து செய்து, 271ன் படி பத்தாண்டு பணி முடித்த ஆய்வக உதவியாளர்களுக்கு ஊதி யம் வழங்க வேண்டும். பணி ஓய்வு, பணி துறப்பு, பதவி உயர்வு மற்றும் மரணம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள ஆசிரியர் அல்லாத அலு வலர் காலிப்பணியிடங்களை உடன டியாக நிரப்ப வேண்டும். சுருக்கெ ழுத்து தட்டச்சர், கம்மியர், அருங்காட் சிய காப்பாளர், உலர் தாவர காப்பா ளர், காவலர், தோட்டக்காரர் ஆகிய பணியிடங்களை நிரப்பி கொள்ள அனுமதிக்க வேண்டும். இப்பணியி டங்களை வெளி முகமை மூலம் நிரப்ப வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப்பெற வேண்டும். அரசு கல்லூரிகளில் அளித்துள்ளதுபோல அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில், மண்டல இணைச்செய லாளர்கள் டி.சக்திவேல், பி.தங்க மணி, மாநில செயற்குழு உறுப்பினர் கள் கே.முருகையா, கே.விஜயன், ஜி. ஜானகி, பி.சரவணகுப்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மண் டல பொருளாளர் எஸ்.தங்கவேல் நன்றி கூறினார்.