districts

img

மாதர் சங்கத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

தருமபுரி, டிச.9- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடங்கி 50 ஆண்டு பொன்விழாவையொட்டி மாதர் சங்கத்தினர் பொன்விழாவை பர வலாக கொண்டாடி வருகின்றனர். பெண்கள் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக தொடர்ந்து களம் காணும் அமைப்பாக அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் திகழ் கிறது. இவ்வமைப்பு துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில் ,  இதன் பொன்விழாவை மாதர் சங் கத்தினர் எழுச்சியோடு கொண்டாடி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, தருமபுரி  மாவட்டம். செங்கொடிபுரத்தில் பொன்விழா ஆண்டு கொடியேற் றுதல் நிகழ்வு நடைபெற்றது. சங் கத்தின் ஒன்றியத் தலைவர் தமிழ் மணி தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் ஆர்.மல் லிகா சங்க கொடியேற்றி வைத்தார். ஒன்றியச் செயலாளர் மீனாட்சி மற் றும் மாவட்ட நிர்வாகிகள் கே. பூபதி, கே.சுசிலா ஆகியோர் பங் கேற்றனர். பொன்விழாவினை யொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கோபி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் வாய்க்கால்ரோடு பகுதி யில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கொடி யேற்று விழா முத்தாயள் தலைமை யில் நடைபெற்றது. மாதர் சங்க கொடியை தாலுக்கா செயலாளர் மல்லிகா கொடியேற்றி வைத்தார். நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன் னணி பொருளாளர் மாரிமுத்து, சிபிஎம் தாலுக்கா செயலாளர் துரை சாமி, விவசாய தொழிலாளர் சங்க விஆர்.மணிக்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சுதந்திராதேவி நன்றி தெரிவித் தார்.