இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை மாவட்ட நிர்வாகிகள் நித்யஸ்ரீ - கோகுல கண்ணன் ஆகியோரது இணையேற்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இவர்களுக்கு சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திங்களன்று நேரில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலக கட்டட பராமரிப்பு நிதியாக ரூ.10 ஆயிரத்தை மணமக்கள் வழங்கினர். இந்நிகழ்வின்போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.அஜய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.