districts

மிகை ஊதியம் 20 விழுக்காடு வழங்குக!

சென்னை, நவ.10- தமிழ்நாடு அரசின் போனஸ் அறிவிப் பில் கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு  மிகை ஊதியம் 20 சதவீதம் வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு கூட்டுறவு ஊழி யர் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தி யுள்ளது. அதன் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி  வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு அரசு அனைத்து பொதுத்துறை  நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும்  டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு 20 விழுக்காடு வரை  மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளது.  ஆனால் லாபம் நட்டம் என்று எதை யும் பாராமல், அரசால் அறிவிக்கப்படும்  நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு  சேர்க்கும் சேவைத்துறையாம் கூட்டு றவு நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்கு மிகை ஊதியம்  பாரபட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டிலாவது போனஸ் சட்ட விதியில் திருத்தம் மேற் கொண்டு கூட்டு றவு ஊழியர் அனைவருக்கும் குறைந் தபட்ச போனஸ் ரூ.8400 வழங்கிட வும், போனஸ் சட்டத்தின்கீழ் வராதவர்க ளுக்கு கருணை தொகையாக  (20 சதவீதம்) ரூ.16,800 வழங்கிடவும், லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு நிறுவன  ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்  வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை வழங்குவார் என எதிர் நோக்கி னோம். ஆனால் அரசின் அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  கடந்த ஆண்டுகளைப் போல எவ்வித மாற்றமும் இல்லாமல் இவ் வாண்டும் மிகை ஊதியம் மற்றும்  கருணைத்தொகை அறிவிக்கப்பட்டி ருப்பது ஊழியர்களிடையே பெரும்  அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.  அனைத்து பொதுத் துறை நிறுவன ஊழி யர்களுக்கும் நிறுவனம் லாபம் எனில்  20 விழுக்காடும், நட்டமெனில் 10 விழுக் காடும் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கக்கூ டிய நிலையில் கூட்டுறவு நிறுவனங்க ளுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு  என்பது தெளிவு படுத்தப்படவில்லை.  மற்ற பொதுத்துறை நிறுவன ஊழி யர்களுக்கு அரசு அறிவித்து இருப் பது போல் கூட்டுறவு நிறுவன ஊழியர் களுக்கும் லாபம் எனில் 20 விழுக்கா டும் நட்டமெனில் 10 விழுக்காடும் மிகை  ஊதியம் மற்றும் கருணைத்தொகை  வழங்க அரசு திருத்திய ஆணை வழங்க  வேண்டுமென கோருகின்றோம்.