தருமபுரி, ஜூன் 20- வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என நல்லம்பள்ளி மாதர் சங்க மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நல்லம்பள்ளி ஒன்றிய 3 ஆவது மாநாடு அதியமான்கோட்டை சமுதாய கூடத்தில் ஒன்றிய தலை வர் ஆர்.மங்கை தலைமையில் நடை பெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் அன்பு வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் ஏ.ஜெயா உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் எல்.மாலா வேலைய றிக்கை முன்வைத்தார். இதில், மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கே.எல்லப் பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இம்மாநாட்டில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூடுதலான நாட்கள் மற்றும் ஊதியம் வழங்க வேண்டும். சத்யா நகர், அக்ரி நகர் காலணிக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். வீடு இல்லா தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத் தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஒன்றிய தலைவராக உஷா, ஒன்றிய செயலாளராக எல்.மாலா, பொருளா ளராக வள்ளி உட்பட 17 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட் டது. முடிவில், மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி நிறைவுறையாற் றினார். இதில், ஏராளனமான பெண்கள் கலந்து கொண்டனர்.