திருப்பூர், அக். 12 - திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன், வனத் துறை இணைந்து காட்டுயிர் வாரத்தையொட்டி காடறிதல் பயணம் ஞாயிறன்று கேரளா சின்னார் வனப்பகுதியில் நடத்தப்பட்டது. இதில் சூழலியல் எழுத்தாளர், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், இன்ஜினி யர்ஸ் சங்கத் தலைவர் சௌ.ஸ்டாலின்பாரதி தலைமை யில் நடைபெற்றது. கோவை சதாசிவம் காட்டிலுள்ள ஆறு, மரங்கள், செடிகள் பற்றியும் யானைகள், சாம்பல் நிற அணில், சாம்பல் நிற மந்தி, நட்சத்திர ஆமை, கரையான், பற வைகள் போன்ற காட்டுயிர்கள் பற்றியும் பல்வேறு விபரங் களை கூறி அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை யும் இப்பயணத்தில் பங்கேற்றோருக்கு எடுத்துக் கூறி விளக்கினார். ஒரு நாள் அன்றாட தொழில் சூழ்நிலைகளிலிருந்து விலகி இயற்கை சூழ்நிலையில் வனப்பகுதியில் வனத் தைப் பற்றியும், வன உயிர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டது பயன் உள்ளதாக, குறிப்பாக குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக காடறிதல் பயணத்தில் கலந்து கொண்ட பொறியாளர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் காட்டையும் காட்டுயிர்களையும் பாதுகாக்க உறுதி எடுத்துக் கொண்டனர். சங்க பொருளாளர் என்.பாரதி ராஜா நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர் ஆர்.கௌதம் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.