districts

img

மலைவாழ் மக்களிடையே காட்டு தீ குறித்த விழிப்புணர்வு கூட்டம்

உடுமலை, மார்ச் 31- மலைபகுதிகளில் ஏற்படும் தீ விபத்துக்களைத் தடுப் பது, தீ விபத்து ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியது குறித்து மலைவாழ் குடியிருப்பு மக்களிடையே விழிப்பு ணர்வு கூட்டம், உடுமலை வனத்துறை அலுவலகத்தில் நடை பெற்றது.  கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் கருகத் தொடங்கியுள்ளது. இதனால்,  காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கும் வகை யில் வனப்பகுதியில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம்பட்டி,  கோடந்தூர், நெருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டு களிலும் காட்டுத்தீ குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத் தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதனன்று உடு மலை வனத்துறை  துணை இயக்குநர் அலுவலகத்தில் 17  செட்டில்மென்ட்களுக்கு  உட்பட்ட  மூப்பர் மற்றும் மலை வாழ் மக்களுக்கு காட்டுத் தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.  இதில், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்கு நர் கணேஷ்ராம் ஆகியோர் காட்டு தீயினால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்து பேசினார். உடுமலை வனச்சரக அலுவலர்  சிவக்குமார், உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய கத்தை சேர்ந்த ரவிக்குமார், முல்லை மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர். இறுதியில் செட்டில்மென்ட் மக்க ளுக்கு நாற்காலிகள் வழங்கப்பட்டது.

;