சேலம், அக்.29- 31 மாதங்களுக்கு பிறகு சேலத்திலி ருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் ஞாயிறன்று துவங்கியது. உதான் திட்டத்தில் ட்ரூஜெட் நிறுவ னம் மூலம் சேலம் - சென்னை விமான சேவை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி 2021 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதையடுத்து சேலத் தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை இயக்க வேண்டும் என சேலம் மற்றும் அண்டை மாவட்ட பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தி ருந்தனர். இதையொட்டி 31 மாதங்க ளுக்கு பிறகு சேலம் சென்னை விமான சேவை ஞாயிறன்று துவங்கியது. சென் னையில் இருந்து சேலம் வந்த முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை உட் பட 43 பேர் பயணித்தனர். சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் செ.கார்மேகம், நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் மலர் மற்றும் இனிப்பு கொடுத்து வந்த வர்களை வரவேற்றனர். இதன்பின் சேலத்தில் இருந்து மீண்டும் சென்னை திரும்பிய விமானத்தில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்பட 64 பய ணிகள் சென்றனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் காலை 11:30 மணிக்கு சென் னையில் இருந்து விமானம் புறப்பட்டு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும் என வும் அதே விமானம் சேலத்தில் இருந்து 12:50க்கு புறப்பட்டு 1:45 மணிக்கு சென்னை சென்றடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். கடந்த அக்.16 ஆம் தேதி பெங்க ளூரு - சேலம் - கொச்சின் வழித்தடத் தில் விமான சேவை தொடங்கி இயக் கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.