கோவை, மார்ச் 25- கோவை மாவட்ட காவல்துறை சார்பில், தொண்டாமுத்தூர் பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடா ளுமன்ற தேர்தல் 2024 தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும், கட்சிகளின் பரப்புரைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தேர்தலில் மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாது காப்பை உறுதி செய்யும் விதமாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரா யணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, புதுப்பாளையம் பிரிவு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு கொடி அணிவ குப்பு மேற்கொள்ளப்பட்டது. இக்கொடி அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.