நாமக்கல், ஆக.8- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - சங்ககிரி சாலை யில், தனியார் இருசக்கர வாகன விற்பனை மற்றும் பழுதுநீக் கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வழக் கம் போல நிறுவனத்தை பணியாளர்கள் மூடிவிட்டு சென்ற நிலையில், திங்களன்று அதிகாலை நிறுவனத்திலிருந்து தீ பற்றி எரிவதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், வெப் படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த னர். இருப்பினும் தீ விபத்தில் 6 வாகனங்கள் தீயில் முழுவதும் எரிந்தது. 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இது குறித்து தீயணைப்பு துறையினர் நடத்திய ஆய்வில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது என தெரியவந் தது. இதைத்தொடர்ந்து பள்ளிபாளையம் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ஏற்பட்ட தீயானது விற்பனை நிலையத்திற்குள் செல்லாமல் தடுக்கப்பட்டதால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய வாகனங்கள் மீட்கப்பட்டன. இதற்கிடையே தீ விபத்து சம்பவத்தால் இருசக்கர வாகனங்களை பழுதுநீக்குவதற்கு விட்டு சென்ற வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர். மேலும், சேதமடைந்த இரு சக்கர வாகனத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.