தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து, திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து சிவாடி, நல்லம்பள்ளியில் பிரச் சாரக் கூட்டம் நடைபெற்றது. சிவாடி கிரா மத்தில் திமுக மாவட்ட துணைச்செயலா ளரும், ஊராட்சி மன்றத் தலைவருமான ஆறுமுகம், நல்லம்பள்ளியில் திமுக ஒன் றியச் செயலாளர் ஏ.எஸ்.சண்முகமும் தலைமை வகித்தனர். இதையடுத்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றி யச் செயலாளர் மல்லமுத்து, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் தடங்கம் எஸ்.இளையசங்கர், துணைச்செயலாளர் வெங்கடேஸ்வரன், பொதுக்குழு உறுப்பி னர் நடராஜ், விசிக நிர்வாகி ஜெயபிரகா சம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.