திருப்பூர், அக். 26 - பல்லடம் வட்டம் கோடங்கிபாளை யத்தில் முறைகேடாக செயல்பட்டு வந்த கல் குவாரிக்கு ரூ.10 கோடியே 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்த கல் குவாரி மீண்டும் இயங்க அனுமதி அளித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் வினோத உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத் தில் எழில் புளூமெட்டல் என்ற கற் குவாரியை ராமகிருஷ்ணன் என்பவர் நடத்தி வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி விஜய குமார் இந்த குவாரி விதிமுறைகளைப் பின்பற்றாமல், முறைகேடாக அதிக அளவு வெடி வைத்து கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதாகவும், சுற்று வட்டார விவசாய விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருவ தாகவும் புகார் கூறினார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் தொடர்ச்சியாக புகார் அளித்தும் அந்த குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படாமல் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த சூழ்நிலையில், எழில் ப்ளூ மெட்டல் நிறுவனத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி, விவசாயி விஜயகுமார் தனது விளைநிலத்தி லேயே ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட் டத்தை மேற்கொண்டார். இந்த உண்ணாவிரதம் விவசாயிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள், சுற்று வட்டார பொது மக்கள் ஆதரவளித் தனர். இவரது போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவும் பெருகி வந்தது. இந்த பின்னணியில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நியமித்த வட்ட அள விலான கண்காணிப்புக்குழு மற்றும் சென்னை புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் நியமித்த சிறப்புக் குழு மூலம் மேற்படி கல்குவாரியில் கள ஆய்வு செய்யப்பட்டது. ஆரம்ப கட்ட விசாரணை அடிப்படையில் அந்த கற்குவாரி உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து எழில் புளூமெட்டல் ராமகிருஷ்ணன் சென்னை சுரங்கத் துறை ஆணையரிடம் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவின் மீது விசா ரணை செய்து, சிறப்புக்குழு அறிக்கை யின் அடிப்படையில் குத்தகை தாரருக்கு ரூ.10 கோடியே 40 லட்சத்து 48 ஆயிரத்து 207 அபராதம் விதிக்கப் பட்டது. அத்துடன் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்ட அடிப்படையில் அந்த அபராதத் தொகையை மாதந் தோறும் ரூ.30 லட்சம் வீதம் தவணை முறையில் செலுத்தவும் உத்தரவிடப் பட்டது. அத்துடன் கனிம விதிகளுக்கு உட்பட்டு குவாரிப் பணி மேற்கொள் ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது போராடிய விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த உத்தரவு நகலைத் தரும்படி விவசாயிகள் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்ப ட்டனர். மேற்படி எழில் ப்ளூமெட்டல் முறை கேட்டில் ஈடுபட்டது உறுதியான தால்தான் ரூ.10 கோடி அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது மீண்டும் அந்த குவாரியை இயக்க அரசு நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். முறைகேடு உண்மை எனும்போது அதை இயக்க அனுமதிப்பது எப்படி சரியாக இருக்கும் என்று அவர்கள் கேட்கின்றனர். அதுவும் அபராதத் தொகையை மாதத் தவணை அடிப்படையில் செலுத்தவும் வாய்ப்பு கொடுத்து, அந்த தொகையும் முழுமை யாக செலுத்தாதபோதும், உடனடி யாக இயக்குவதற்கு அவசர அவசர மாக அனுமதி கொடுத்துள்ளனர். அந்த அளவுக்கு சென்னை புவியியல் மற்றும் சுங்கத் துறைக்கு இதில் “என்ன அக்கறை” என்றும் விவசாயிகள் சந்தேகக் கேள்வியை எழுப்புகின்றனர்.