கோவை, ஜன.23- விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஏர் கலப்பையுடன் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார் பில், கோவை ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் துரைசாமி தலைமை வகித் தார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில், விவ சாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத் திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உட னடியாக வழங்க வேண்டும். கூலி நிலு வைத் தொகையை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மண் வெட்டி, ஏர் கலப்பைகளை சுமந்தபடி முழக் கங்களை எழுப்பினர்.