districts

பூக்கள் விலை திடீர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி, நவ.26- கார்த்திகை தீப விழாவை முன் னிட்டு, பூக்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் மாரண்டஹள்ளியை சுற்றி யுள்ள கிராமங்களில் சுமார் 2 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவிற்கு மேல் விவசாயி கள் சாமந்தி பூ சாகுபடி செய்து வரு கின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை தருமபுரி நகர பேருந்து  நிலையத்தில் செயல்படும் பூ சந்தை யில் விற்பனை செய்கின்றனர். கோவை,  திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு,  சேலம், தருமபுரி, வேலூர், புதுச்சேரி,  திருவண்ணாமலை ஆகிய பகுதி களுக்கு மட்டுமல்லாமல் கேரளம்,  கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்க ளில் இருந்தும் ஏராளமான வியாபாரி கள் தருமபுரி சந்தைக்கு வந்து மொத்த மாகவும், சில்லறையாகவும் சாமந்தி பூக்களை கொள்முதல் செய்வது வழக் கம். ஆனால், கடந்த சில நாட்களாக பூக்களின் விலை அதிகரிப்பால் கிலோ  30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.  அந்த வகையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தருமபுரி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ கிலோ 80  முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ சன்ன மல்லி 800 ரூபாய்க்கும் விற்பனை செய் யப்பட்டது. அதேபோல் குண்டுமல்லி 800 ரூபாய்க்கு வியாழனன்று விற்ப னையான நிலையில், தற்போது  1000 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்பட்டது.  மேலும், கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும், சம்பங்கி, ரோஸ், அரளி, செண்டுமல்லி ஆகிய பூக்க ளின் விலையும் வெள்ளியன்று அதிக ரித்தது. இதனால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.