தாராபுரம், மார்ச் 25- தாராபுரம் அருகே உள்ள பெல் லம்பட்டியில் போலி மக்காசோள விதையால் ரூ.2லட்சம் நஷ்டம் ஏற் பட்டதால் இழப்பீடு கேட்டு போரா டிய விவசாயிகளை வலுக்கட்டா யமாக போலீசார் கைது செய்த னர். போலி மக்காச்சோள விதை யால் நஷ்டமடைந்த விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்ககோரி பெல் லம்பட்டியில் அக்ரோ சர்வீஸ் ஏஜென்சீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தமி ழக விவசாயிகள் பாதுகாப்பு சங் கத்தின் சார்பில் மாநில கொள்கை பரப்புச்செயலாளர் சிவக்குமார் கூறியதாவது, தாராபுரம் அருகே உள்ள பெல்லம்பட்டியை சேர்ந்த வர் விவசாயி ராமசாமி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மானூர்பாளையத்தில் செயல்பட்டு வரும் அக்ரி ஏஜென்சீஸ் என்ற கடை யில் பயனீர் நிறுவனத்தின் ஆறு கிலோ மக்காச்சோள விதையை வாங்கி 4 ஏக்கரில் நடவு செய்தி ருந்தார். இந்நிலையில் மக்காச் சோளம் பருவத்திற்கு வந்தபின் னும் கதிர்மணிகள் இல்லாமல் பொக்கையாக இருந்துள்ளது. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கடந்த ஜனவரி மாதம் பயனீர் நிறுவனத்திற்கும், வேளாண்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விதை யின் தன்மை குறித்து உரிய முறையில் ஆய்வு செய்யாமல் முறையற்ற பல்வேறு காரணங் களை தெரிவித்து வருகின்ற னர். ஆனால் அதே நேரத்தில் மற்ற நிறுவனங்களில் மக்காச்சோள விதைகளை வாங்கி பயிரிட்ட விவ சாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத் துள்ளது. எனவே, தரமற்ற மலட்டுத் தன்மையுள்ள போலி மக்காசோள விதையை விற்பனை செய்த பய னீர் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட முயன்ற வர்களை வலுக்கட்டாயமாக போலீ சார் கைது செய்து வேனில் ஏற்றி யதால் போலீசாருக்கும், விவசாயி களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.