திருப்பூர், டிச.7- வடகிழக்கு பருவமழையால் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் நிரம்பி உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரு கிறது. இந்நிலையில், இந்த தண்ணீரை சேமிக்கும் வகையில் பல வருடங்களாக கிடப்பில் உள்ள அப்பர் அமராவதி மற்றும் ஆணைமலை நல்லாறு அணை களை கட்ட வேண்டும் என்று கோரிக்கையை விவசாயிகள் வைத்துள்ளனர். அப்பார் அமராவதி திட்டம் அமராவதி அணைக்கு நீர் ஆதாமாக உள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய மூன்று ஆறுகள் இணைந்து கூட்டாறாக அமராவதி அணைக்கு தண்ணீர் வருகிறது. கூட்டாறு வரும் வழியில் தூவானம் அருவி அமைந்துள்ள இடத்தில் மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க சுமார் 600 ஏக்கர் பரப்பள வில் அப்பர் அமராவதி அணை என்ற பெயரில் ஒரு தடுப்பு அணை கட்ட முடிவு செய்யப்பட் டது.
இந்த அணையில் சுமார் 5 டிஎம்சி நீரை சேமித்து வைத்து மின்சரம் உற்பத்தி செய்யவும், கோடை காலங்களில் அப்பர் அமராவதி அணையில் இருந்து தண்ணீரை அமராவதி அணைக் கும் கொண்டு செல்லவும் முடியும். ஆனைமலை - நல்லாறு திட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு திட் டத்தில் கட்டப்பட்ட திருமூர்த்தி அணைக்கு மேல் நீராறு அணை வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தண்ணீர் வருகிறது. தண்ணீர் வரும் துரத்தை குறைக்கும் வகையி லும், கூடுதலாக தண்ணீரை சேமிக்கும் வகையிலும் திரு மூர்த்தி அணையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள மாவடப்பு பகுதியில் இருக்கும் நல்லாற்றின் குறுக்கே அணைகட்ட திட்டம் வகுக்கப் பட்டது. அதேபோல் இந்த ஆற்றின் குறுக்கே ஆனைமலை ஆறு அணை கட்டுவதற்கான திட் டமும் நடைபெறவில்லை.
இந்த அணைகள் கட்டப் பட்டால் நல்லாறு அணை யில் இருந்து கால்வாய் வழியாக சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து சேரும். மேலும் கூடுதலாக மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைத்து கொள்ளமுடி யும். இதனால் சுமார் 8 டிஎம்சி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு வறட்சி காலங்களில் கிடைக்கும். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், புதிய அணைகளை கட்ட ஆய்வுகள் செய்து இடங் களை தேர்வு செய்து சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேல் கடந்து விட்டது. தற்பொழுது பெய்த மழை யால் அமராவதி மற்றும் திரு மூர்த்தி அணைகளில் இருந்து உபரி நீர் வீணாக வெளியேற்றப் படுகிறது. இந்த ஆணை கள் கட்டப்பட்டு இருந்தால் அதி காமான தண்ணீர் சேமித்து இருக்க முடியும். ஆகவே, தமிழக அரசு இந்த அணைகள் கட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.