districts

கொரோனா காலத்தில் பெற்ற கடனை செலுத்த கூடுதலாக ஓராண்டு கால அவகாசம் வழங்க ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

திருப்பூர், அக். 17 – கொரோனா தொற்று பொது முடக் கக் காலத்தில், பின்னலாடை தொழில்  துறையினர் பெற்ற கடன் அசல் தொகையை செலுத்துவதற்கு கூடுத லாக ஓராண்டு கால அவகாசம் வழங் கும்படி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்  மத்திய ஜவுளி மற்றும் தொழில், வர்த்த கத் துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம்  கோரியுள்ளனர். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  திங்களன்று திருப்பூருக்கு வருகை  தந்தார். அப்போது திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்க கௌரவத் தலைவர் ஏ.சக்தி வேல், தலைவர் கே.எம்.சுப்பிரமணி யம், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித் தனர். இந்த மனுவில் அவர்கள் கூறியி ருப்பதாவது: தமிழகத்தில் அமைப்ப தாக அறிவிக்கப்பட்டுள்ள மெகா ஜவு ளிப் பூங்காவில் திருப்பூரைச் சேர்ந்த  50 ஏற்றுமதி நிறுவனங்கள் தொழிற் சாலை அமைக்க விரும்புகின்றனர். எனவே இந்த பூங்காவை அமைத்து செயல்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலீடு ரூ.15 கோடி, விற்று வரவு  அதைப் போல் மூன்று மடங்கு இருக்கும்  நிறுவனங்களுக்கு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நடுத்தர, சிறு, குறு  தொழில் நிறுவனங்களின் நலனை கருத் தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.  தொழில்நுட்பட மேம்பாட்டு நிதி (டஃப்)  திட்டத்திற்கு மாற்றாக புதிய திட்டத்தை  கொண்டு வர வேண்டும். இங்கிலாந்து நாட்டுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந் தம் இம்மாத இறுதிக்குள் நடைமு றைக்கு வர இருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஆகி யவற்றுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந் தம் விரைந்து ஏற்படுத்த வேண்டும். வங்கதேசத்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் நிலையில் அங்கிருந்து பின் னல் துணி மற்றும் ஆயத்த ஆடைகள்  இந்தியாவுக்கு வருவது மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே இதைத்  தடுக்க பொருத்தமான நடைமுறையை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் திருப்பூர் பின்னலாடைத் துறையில்  உள்ள நடுத்தர, சிறு, குறு நிறுவனங்கள்  அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத் தில் (இசிஎல்ஜிஎஸ்) 30 சதவிகிதம் வரை  கடன் பெற்றனர். தற்போது அந்த கட னின் அசல் தொகையை வட்டி மானியத் துடன் திரும்பச் செலுத்தத் தொடங்கி யுள்ளனர். தற்போது இந்த தொழில் துறையினர் சந்திக்கும் நிதிச்சுமையை சமாளிப்பதற்காக, மேற்படி அசல் தொகையை செலுத்துவதற்கு மேலும் ஓர் ஆண்டு காலக்கெடு வழங்க வேண்டும்.