districts

img

இந்தியாவில் 230 லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிப்பு புற்றுநோய் பாதித்த மாவட்டங்களில் ஈரோடு முதலிடம்

ஈரோடு, பிப். 5- கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் 230 லட்சம்  மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என் றும், இதில் தமிழகம் ஐந்தாவது இடத்திலும், மாவட் டங்களில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் இருப்ப தாக புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுகேஸ்வரன் எச்சரித்தார். உலகம் முழுவதும் புற்றுநோய் விழிப்புணர்வு நாள், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி  அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, ஈரோடு  இந்திய மருத்துவ சங்கம் மற்றும் சுதா ஹாஸ்பிடல்  சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. ஈரோடு காலிங்கராயன் இல்லத்திலி ருந்து துவங்கிய பேரணியை, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  முன்னதாக, இந்நிகழ்வில் பங்கேற்று புற்று நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர்.சுகேஸ்வ ரன் பேசுகையில், இந்தியாவில் புற்றுநோய்கள் அதிகம் பாதித்த மக்கள் உள்ள மாநிலங்களில் தமி ழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத் தில் புற்றுநோய் அதிகம் கொண்ட மாவட்டமாக ஈரோடு முதலிடத்தில் திகழ்கிறது. புகையிலை, மது, சரியான உடற்பயிற்சி இன்மை, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் புற்றுநோய் வருகிறது. கடந்த காலங்களில் 40 முதல் 50 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. தற்போது  20 வயதிலேயே புற்றுநோய் ஏற்படுகிறது. அதில்  50 முதல் 60% மக்கள் மூன்றாவது அல்லது நான்கா வது கட்டத்தை எட்டியுள்ளனர். காலதாமதமாக புற் றுநோய் கண்டறிவதால் இவர்கள் முற்றிய நிலை யில் புற்றுநோய் சிகிச்சைக்கு வருகின்றனர். எனவே ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோயை கண் டறிவது அவசியம் என்றார்.