உதகை, செப்.7- உதகை அருகே கடை களை சேதப்படுத்திய காட்டு யானைகளை வனப்பகுதிக் கள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கொலக்கம்பை கிராமத்தில் தனியார் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு புதனன்று அதிகாலையில் 5 காட்டு யானைகள் புகுந்தன. அப்போது அங்குள்ள ரேசன் கடை, அங்கன்வாடி மையம், மளிகைக்கடை ஆகியவற்றை சேதப்படுத்தின. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் காட்டுயானை கள் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி சென்று விட்டன. கொலக்கம்பை, கிளிஞ்சடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக குட்டியுடன் 5 காட்டு யானை கள் சுற்றி வருகின்றன. எனவே, அவற்றை ஊருக்குள் புகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அப்போது காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண் காணித்து வருவதாகவும், கெத்தை வனப் பகுதிக்குள் யானைகள் விரைவில் திருப்பி அனுப்பப்படும் எனவும் வனத்துறையினர் உறுதியளித்தனர்.