districts

img

நீதிமன்ற உத்தரவின்படி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்துக!

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

சென்னை,நவ.10-  ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய் வை நீதிமன்ற உத்தரவின்படி குறை பாடுகளை நீக்கி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண் டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:  பள்ளிக்கல்வித்துறையின் அர சாணை (1டி) எண்: 218-ஐ எதிர்த்து நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கு களில் பெறப்பட்ட தீர்ப்பாணைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான திருத்திய அரசாணை (1டி) எண்: 393 பள்ளிக்கல்வி (பக 5(1) துறை நாள்: 04.10.2019ல் வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்  என்ற விதி யிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை பொது வானதாக ஆக்குவதுதான் நீதியின் பயன் அனைவருக்கும் கிடைப்பதற்கு வழிவகை செய்யும். மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் நீதிமன்றம் சென்று  பல ஆயிரங்கள் பணம் செலவழித் தால்தான் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்பது எவ்விதத்தி லும் நியாயமானதல்ல. 

2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் காரண மாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் நடைபெறவில்லை. தொடக்கக்கல்வித் துறை உடனடியாக இதற்குரிய ஆணையை வெளியிட வேண்டும். மேலும், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கலந்தாய்விலும், அதற்கு முன்பும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யப்பட்ட உபரி பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் களுக்கு இக்கலந்தாய்வில் ஒன்றியத் திற்குள் கலந்தாய்வு நடைபெற்று முடிந்தவுடன் ஏற்படும் காலிப்பணியிடங் களை அளித்து அவர்கள் சொந்த ஒன்றி யத்திற்குள் வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்படி குறைகளை நிவர்த்தி செய்து ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் நியாயமான, நேர்மையான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை பள்ளிக்கல்வித்துறை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.