ஈரோடு, ஜீன் 25- ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை நேர்காணல் மூலம் அரசு அலுவலகங்க ளுக்கு அலைந்து வருகிற நிலையில், தற் போத மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப் பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத் தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரனமாக கடந்த 2020 மற்றும் 2021 ம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறவில்லை. தற்போது அரசாணை நிலை எண்.136 நிதி (ஓய்வூ தியம்)துறை நாள் 20-05-2022 ன்படி ஓய்வூதி யர்கள் இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள னர். இந்நிலையில் ஓய்வூதியர்களின் நல னைக் கருத்தில் கொண்டு நேரில் கருவூலத் திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமார்பிக்கும் நடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையைப் பயன்படுத்தியும் ஓய்வூதி யர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்த படியே தபால் துறை பணியாளர்கள் மூல மாக ரூ.70- கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்க ளின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்ய லாம். ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாக வும் கைரேகை குறியீட்டு கருவி (Biometric Device) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்கா ணல் செய்யலாம்.
கருவூல முகாம் இலவச சேவையை பயன்படுத்தி இணையதள மின் னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்ய லாம். இவற்றில் ஏதாவது ஒருமுறையை பயன் படுத்தலாம். மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் 1) ஆதார் எண் 2) P.P.O.No 3.வங்கிகணக்குஎண் 4).ஓய்வூதி யம் வழங்கும் அலுவலகம் ஆகிய விபரங் களை அளிக்க வேண்டும். வாழ்நாள் சான்றினை (www.tn.gov.in/ karuvoolam) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஓய்வூதிய வங் கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலா ளர், அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் ஒன்றிய அரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வா ளர் ஆகிய ஏதேனும் ஒருஅலுவலரிடம் சான் றொப்பம் பெற்று வாழ்நாள் சான்றிதழ் படி வத்தினை தபால் மூலம் கையொப்பம் பெற்று தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பலாம். தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர் காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் குறிப் பிட்ட மாதங்களில் அரசு வேலை நாட்களில் காலை 10முதல் பிற்பகல் 2 மணி வரை ஓய்வூ தியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்குச் சென்று ஆண்டு நேர்கா ணல் செய்யலாம். நேர்காணலில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் தொடர்புடைய மாவட்டக் கருவூல அலுவலர், மண்டல இணை இயக்குநர் அல்லது சென்னை கரு வூல கணக்குத்துறை ஆணையரகத்திற்கு தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக தெரி விக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி விடுத்த செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.