கோவை, மார்ச். 6- தமிழகத்தில் பேரிடர் நிகழும்போதெல் லாம் தமிழகத்தை எட்டிக்கூட பார்க்காத மோடி, இப்போது தேர்தல் வருவதால் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருவதாக மதுக் கூர் ராமலிங்கம் விமர்சித்தார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதி யர் சங்கம் சார்பில் நாடும் நாமும் சிறப்பு கருத் தரங்கம் புதனன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க அரங்கில் நடைபெற்ற நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் எஸ்.மதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.அருணகிரி வரவேற்றார். சங் கத்தின் மாநில துணைத் தலைவர் என்.அரங் கநாதன் கருத்தரங்கை துவக்கிவைத்து உரை யாற்றினார். இதில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாநிலத் தலை வர் மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்று சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசுகை யில், தேர்தல் பத்திர ஊழல் குறித்து விமர் சித்து வழக்கு பதிவு செய்தது மார்க்சிஸ்ட் கட்சி. கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நடைமுறை சரி யானதல்ல அது ஊழலுக்கு வழி வகுக்கும் என தொடர்ந்து வாதிட்டு வந்தது. அந்த வழக் கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்றது. மேலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அனைத்து விபரங்களையும் மார்ச் 6 ந்தேதிக்குள் வெளியிட வேண்டு மென தீர்ப்பளித்தது. ஆனால், தேர்தல் பத்திரம் மூலமாக அதி கமாக நிதி திரட்டிய ஆளும் பாஜகவிற்கு ஆத ரவாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிட கால அவகா சம் கேட்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகத் தில் ஒரு பட்டனை தட்டினால் அனைத்து விப ரங்களும் கிடைத்து விடும். ஆனால் தம்மி டம் உள்ள சிறிய தகவலை தருவதற்கு மூன்று மாதம் கால அவகாசம் கேட்கிறது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இது பாஜகவின் தேர்தல் பத்திர ஊழலை மறைப்பதற்குத் தான் என்பது கண்கூடு. இப்போது, தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருகிறார். நாட்டில் உள்ள அனைவரும் அவரது குடும்பத்தினர் என்ப தால் குடும்பத்தினரை பார்க்க அடிக்கடி வரு கிறார் என அண்ணாமலை சொல்கிறார். நமது கேள்வி என்னெவென்றால், தூத்துக்குடி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது வரவில்லை, சென்னை புயல் பாதிப்பு சமயத் திலும் வரவில்லை. கேட்ட நிவாரண தொகை யும் தரவில்லை. இப்போது தேர்தல் வருகி றது என்பதால் தமிழகத்திற்கு அடிக்கடி வருகி றார். தொலைக்காட்சிகளில் பல கோடி ரூபாய் செலவு செய்து மோடி கேரண்டி விளம்பரம் செய்யப்படுகிறது. ஏற்கனவே கொடுத்த கேரண்டி என்னவானது. இப்போது மக்கள் வரிப்பணத்தில் புதிய கேரண்டி கொடுக்கி றார். மக்களிடம் மனிதநேய சிந்தனை நிரம்பி உள்ளது. சமீபத்தில் தூத்துக்குடி மழை வெள் ளத்தில் சிக்கிக்கொண்ட ரயிலில் இருந்த பய ணிகளை காப்பாற்ற, அப்பகுதியில் வசிக் கும் மக்கள் செய்த உதவிகள் மகத்தானது. நின்று போன ரயிலில் இருந்த குழந்தைக ளுக்கு பால் கிடைக்கவில்லை.
அருகில் இருந்த கிராமத்தில் உள்ள வீடுகளிலிருந்து பால் கொடுத்து பாதுகாத்தனர். சாதி, மதம் பேதமின்றி அம்மக்கள் செய்து கொடுத்த னர். ரயிலில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் குளித்துவிட்டு விரதத்தை முடித்து உணவு அருந்த அப்பகுதியில் இருந்த இஸ்லாமி யர்கள் தமது மசூதிகளில் இடம் கொடுத்த னர். பேரிடர் காலங்களில் இது போன்ற நிறைய உதாரணங்களே பார்க்கலாம். மக்க ளிடம் இயல்பாகவே மனித நேயமும் அன்பும் நிறைந்திருக்கிறது. ஆனால் அரசியல் லாபத் திற்காகவே மக்களிடம் வெறுப்பை விதைத்து மக்களின் மனங்களில் பதட்டத்தை தூண்டி மோத விடுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ராமர் கோவிலை கட்டினார்கள். மக்களிடம் வெறுப்புணர்வை வளர்க்கிறார்கள். மீண்டும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் இருக்கும் ஜனநாய கமும் வாக்குரிமையும் பறிபோகும். மக்கள் எப்போதும் ஒரு பதட்டமான சூழ்நிலையில் வாழும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமை யிலான பாஜக ஆட்சியை வீழ்த்த அனைவ ரும் தமது குடும்பம், உறவினர்கள், நண்பர்க ளிடத்தில் பாஜகவின் கபட வேடத்தை தோலுரித்து மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார். முடிவில் மாவட்டப் பொருளாளர் பி. நடராஜன் நன்றி கூறினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.