அவிநாசி, மார்ச் 22- நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் ஆலோச னைக் கூட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பின ருமான ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி ஒன்றியத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உட்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.