சேலம், ஆக.24- குறைந்த பட்ச ஊதியம் வழங்கக்கோரி தமிழ் நாடு மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங் கத்தின் சார்பில் சேலம் தொழி லாளர் நல அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அறிவித்து 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் அறிவித்த குறைந்தபட்ச ஊதிய மாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் உள் ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில் குமார் தலை மையில் நடைபெற்ற இயக்கத்தில், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.வெங்க டபதி, மாவட்டச் செயலாளர் விஜய் ஆனந்த், மாநிலச் செயலாளர் பிரதீப், மாநிலக்குழு உறுப்பினர் சௌந்தரராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் திலிப் மேனன் சிறப்புரை ஆற்றினார். முடிவில், மாவட்டப் பொருளாளர் பொன்மலை செல்வன் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து, தொழிலாளர் நல மாவட்ட துணை ஆணையாளர் இந்தியா விடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.