districts

ரூ.10 கோடியில் உதகை படகு இல்ல ஏரியை தூர்வாரும் பணி

உதகை, ஆக.26- உதகை படகு இல்ல ஏரியை ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வார திட்ட மிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் முக்கிய சுற்றுலா தளமாக உதகை படகு இல்லம் திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் உதகை ஏரியில் படகு இல்லம் செயல் பட்டு வருகிறது. இந்த ஏரி 1823 ஆம்  ஆண்டில் செயற்கையாக உருவாக் கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சேரிங் கிராஸ் முதல் காந்தல் முக்கோணம் வரை ஏரியின் பரப்பளவு இருந்தது. அப்போது ஏரியின் தண்ணீர் குடிநீ ராக பயன்படுத்தப்பட்டது. இதன்பின் காலப்போக்கில் உதகை நகரில் கட் டப்படும் கட்டடங்கள் எண்ணிக்கை  அதிகரித்ததால், வணிக வளாகங் கள், ஓட்டல்கள், வீடுகள், தங்கும் விடு திகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கோடப்பமந்து கால்வாய் வழி யாக உதகை ஏரியில் கலக்கிறது. மேலும், மழைக்காலங்களில் விவ சாய நிலங்களில் இருந்து அடித்து வந்த மண்ணும் ஏரியில் படிகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஒரு  முறை மாவட்ட நிர்வாகம் மூலம் ஏரி தூர்வாரப்பட்டது. அப்போது கரை பகுதி மட்டுமே தூர்வாரியதாக தெரி கிறது. இதைத்தொடாந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏரியை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் கோடப் பமந்து கால்வாய் உதகை ஏரியில் கலக்கும் முகத்துவாரத்தில் 2 அடி ஆழத்திற்கு படிந்திருந்த மண் மட் டுமே அகற்றப்பட்டது. உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக் காக 33 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள், 105 மிதி படகுகள் இயக்கப் பட்டு வருகிறது. ஏரியின் மறு கரை யில் உள்ள தேனிலவு படகு இல்லத் திலும், சிறுவர் பூங்கா உட்பட வசதி கள் உள்ளன. கடந்தாண்டு உதகை படகு இல்லத்துக்கு 16 லட்சம் சுற் றுலா பயணிகள் வந்துள்ளனர். இவ் வளவு முக்கியத்துவம் வாய்ந்த உதகை ஏரி கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தூர்வரப்படாததால் சேறும், சகதியுமாக உள்ளது.

இத னால் ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் சுற்றுலா பயணிக ளின் படகுகள் சகதியில் சிக்கிக் கொள் கிறது.  எனவே, சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும், கோடப்பமந்து கால் வாயில் இருந்து கொண்டுவரும் தண்ணீரை அதிகளவில் சேமிக்கவும் வலியுறுத்தி உதகை படகு இல்ல ஏரியை தூர்வார வேண்டும் என்று  சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இந்நிலையில், தற்போது உதகை படகு இல்ல ஏரியை முழுவதுமாக தூர்வார பொதுப்பணித்துறை, நீர் வளத்துறை அதிகாரிகள் திட்டமிட் டுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித் துறை நீர்வள ஆதார உதவி செயற் பொறியாளர் சதீஷ்குமார் கூறுகை யில், உதகை படகு இல்ல ஏரி,  கோடப்பமந்து கால்வாய் முழுவது மாக தூர்வாரப்பட உள்ளது. கோடப் பமந்து கால்வாயில் மூன்றரை கிலோ  மீட்டர் தூரம் மணல் மற்றும் செடிகள் அகற்றப்படுகிறது. இதேபோல், 10 லட் சம் மீட்டர் கியூபிக் கொள்ளளவு கொண்ட உதகை ஏரியில் 2.98 லட்சம் மீட்டர் கியூபிக் அளவுக்கு சகதி எடுக் கப்படுகிறது. மேலும், கோடப்பமந்து கால் வாயில் இருந்து ஏரியில் இணையும் இடத்தில் சேறும், கழிவுகள் தானி யங்கி முறையில் அகற்ற எந்திரங் கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற் காக மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிர்வாக நிதியாக ரூ.10 கோடி செலவா கும் என மதிப்பிடப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு கருத் துரு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும், என்றார்.