கோவை, ஜூலை 13- தமிழகத்திலேயே முதல் முறையாக வளர் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கல்லீரலை மற்றொருவருக்கு டோமினோ முறையில் மாற்றி சிகிச்சை அளித்து கோவை ஜெம் மருத் துவமனை மருத்துவர்கள் சாதித்துள்ளனர். கோவை மாவட்டம், ராம நாதபுரம் பகுதியில் ஜெம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையில் அரியவகை வளர் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டிருந்தார். இவரின் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அதனை மற்றொரு நோயா ளிக்கு மாற்றி அமைத்துள்ளனர். ஒரே நேரத் தில் மூன்று நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் இந்த முறை டோமினோ கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்று அழைக் கப்படும். இவ்வகை அறுவை சிகிச்சை இந்தியா வில் இரண்டு முறை மட்டுமே மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக ஜெம் மருத்துவமனை இத்தகையை அறுவை சிகிச்சையை மேற் கொண்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் விஜய் ஆனந்த், சாமிநாதன் சம்பந்தம் குழுவினர் வெற்றிகரமாக செய் துள்ளனர். இதுகுறித்து ஜெம் தலைவர் பழனிவேல் கூறுகையில், “வளர் சிதைவு கோளாறு கார ணமாக பாதிக்கப்பட்ட ஒருவரது கல்லீரலை மற்றொருவருக்கு பொறுத்தும் முன்பு அவ ருக்கு அந்த கல்லீரல் தகுதியானதாக உள் ளதா என்று ஆய்வு செய்து அதன் பின்னர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அறுவை சிகிச்சை மேற் கொண்ட இருவரும், கல்லீரல் தானம் வழங் கிய ஒருவரும் தற்போது நல்ல நிலையில் உள் ளனர். தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சையை எங்கள் மருத் துவக்குழு செய்தது எங்களுக்கு பெருமைய ளிக்கிறது” என்றார்.