மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி
உதகை, அக்.27- நீலகிரியில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி கள் வெள்ளியன்று துவங்கியது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் வீரர் டேனிஷ் நினைவாக, முதல் முறையாக மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி உதகை அண்ணா உள்விளையாட்டு அரங் கத்தில் தொடங்கியது. போட்டிகளை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சதீஷ்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத் தார். இப்போட்டிகளில் கூடலூர், குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் 18 முதல் 34 வயது வரை உள்ளவர்கள் ஒரு பிரிவாகவும், அதற்கு மேல் 35, 45, 55 வயது வரை உள்ளவர் களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்படுகிறது. இந்த விழாவில் இறகு பந்து சங்கத் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் லத்தீஷ், பொருளாளர் இருதயராஜ், கூடைப் பந்து விளையாட்டு மாவட்ட துணைத் தலைவர் மோகன் குமார், உதகை மகிளா நீதிமன்ற அரசு வக்கீல் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி
சேலம், அக். 27- மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை சேலத்தில் துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார் . தீபாவளி பண்டிகை முன்னிட்டு கைத்தறித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வரு கிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி திடலில், இந்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகமும் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை இணைந்து மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சேலம் வெண்பட்டு வேஷ்டி, சட்டைகள் காஞ்சிபுரம் பட்டு சேலை திருபுவனம் பட்டு சேலை, கோவை கோர காட்டன் சேலை, பரமக்குடி அருப்புக் கோட்டை பருத்தி சேலைகள், மதுரை சுங்குடி சேலை, கடலூர் குறிஞ்சிப்பாடி லுங்கி, திருநெல்வேலி செடி பூட்டா சேலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள புடவைகள் மற்றும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதனை பொது மக்கள் ஆர்வமாக பார்த்து வாங்கிச் சென்றனர். இந்த கண் காட்சி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த கண்காட்சியை சேலம் ஆட்சியர் கார்மேகம் துவக்கிவைத்தார்.
ரேசன் அரிசியை சோதனைக்குட்படுத்த கோரிக்கை
தருமபுரி, அக்.27- நியாய விலைக்கடைகளில் வழங்கும் புழுங்கல் அரிசியை சோதனைக்குட்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரியில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொது மக்களுக்கு புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்படு கின்றன. இந்த அரிசி பயன்படுத்தும் பொழுது, குடும்ப பெண் கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். காரணம் புழுங்கல் அரிசி தண்ணீரில் கொட்டி ஊற வைக்கும் பொழுது சிறிது நேரத்தில் பிசுபிசுப்பு தன்மை அதிகமாக இருக்கின்றது. அரை மணி நேரத்திற்கு மேல் அரிசியை உப்பு கலந்து ஊற வைத்து பிறகு கழுவ வேண்டும். இப்படி கழுவினால் மட்டுமே பிசுபிசுப்பு தன்மை நீக்கப்படுகிறது. இல்லையென்றால் அந்த அரிசி பயன்படுத்த முடிவதில்லை என பொதுமக்கள் குற்றஞ சாட்டியுள்ளனர். அப்படியே பயன்படுத்தினால் பல்வேறு உபாதைகள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவு விடுதிகளிலும், தெருக்களில் உள்ள உணவகங்களிலும் சோதனை மேற் கொள்கின்றனர். தரம் இல்லாத உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்படுகின்றது. அதனைத்தொடர்ந்து பள்ளி கல்லூரிகளிலும் விழிப்பு ணர்வு ஏற்படுத்துகின்றனர். அதேபோல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் நியாய விலை கடைகளில் விற்கப் படுகின்ற உணவு பண்டங்கள், அரிசி, பருப்பு, வகை களையும் எண்ணெய் வகைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
நாமக்கல், அக்.27- திருச்செங்கோடு அருகே வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட் கள், வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - சேலம் சாலை யில் உள்ள கைலாசம்பாளையம் சுப்பராயன் நகர் 2ஆவது தெரு பகுதியில் அண்ணாமலை என்பவர் வீடு உள்ளது. இந்த வீட்டில், ஜவுளி வியாபாரம் செய்யும் மனோகரன், கருப்பண்ணன் என்பவரும் குடும்பத்துடன் வசித்து வரு கின்றனர். சம்பவத்தன்று மனோகரன் வீட்டின் முன் நிறுத்தப் பட்டிருந்த ஆல்டோ கார் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது. பின்னர், கருப்பண்ணன் வீட்டு முன்பிருந்த கூரை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது வீட்டில் கருப்பண்ணனின் மனைவி தனலட்சுமி, மகன் கதிர்வேல் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத் தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், கார் முழுவதும் எரிந்து சேதமானது. இந்நிலையில், வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற் பட்ட தீயை அணைத்து கொண்டிருந்தனர். அப்போது காருக்கு அருகில் இருந்த கேஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், தீயணைப்பு வீரர்கள் பரத் வாஜ், ஜெகநாதன் ஆகிய இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை தீயணைப்புத் துறை யினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில், மின் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படு கிறது.
சாட்சிக்கு கொலை மிரட்டல் - 2பேர் கைது
உதகை, அக்.27- அடிதடி வழக்கில் குன்னூர் நீதிமன்றத் திற்கு சாட்சி சொல்ல வந்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன். இவர் கடந்தாண்டு சின்னகரும்பாலம் பகுதியில் ஒப்பந்தம் எடுத்து கட்டுமான பணிகள் செய்து வந்தார். இவரிடம் குன்னூரை சேர்ந்த சுரேஷ், ஆனந்த் உள்ளிட்டோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்தாண்டு ஊதியம் வழங்குவது தொடர்பாக ஒப்பந்ததாரர் சுப்பிர மணிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது இருதரப்பின ருக்கு கைகலப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதன் பேரில் சுரேஷ், ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை குன்னூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசா ரணைக்காக வியாழனன்று சாட்சி சொல்ல மேஸ்திரி சரவணன் நீதிமன்றத்திற்கு ஆஜ ராக வந்தார். அப்போது சுரேஷ், ஆனந்த் ஆகிய 2 பேரும் அவரை வழிமறித்து சாட்சி சொல்ல கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள் ளனர். இதுகுறித்து சரவணன், குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ், ஆனந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
போனஸ் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
ஈரோடு, அக்.27- தமிழ்நாடு அரசின் போனஸ் அறிவிப் பினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க (சிஐடியு) ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் பி.குணசேகரன் தலை மையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், துணைத்தலைவர் என்.முருகையா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் போனஸ் அறிவிப்பிற்குக் கண்டனம் தெரி விக்கப்பட்டு, அக்.31 ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், டாக்டர் கலைஞரால் உருவாக் கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான குடி நீர் வடிகால் வாரியம் நட்டத்தில் இயங்கும் துறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் வழங்கப் பட்டதற்கு மாறாக 8.3 விழுக்காடு போனஸ் என்று அறிவிப்பது ஏற்புடையதல்ல. ஆகவே, மற்ற துறைகளுக்கு அறிவித்ததைப் போல் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும். போராட்டத்தினால் பொதுமக்களுக்கு வழங் கக்கூடிய குடிநீர் விநியோகம் பாதிக்கப்ப டாதவாறு துறை ஊழியர்களின் கோரிக் கையை பரிசீலிக்க வேண்டும். எனவே, அரசாங்கம் பரிசீலித்து மறு அறிவிப்பு வெளி யிட வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக் கப்பட்டது.
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கு
தருமபுரி, அக்.27- கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம், ஆட்சியர் கி.சாந்தி தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் விரைவில் கரும்பு அரவை தொடங்கும் நிலையில் உள்ளதால் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். தற்போது கரும்பில் ஏற்பட்டுள்ள வேர்ப்புழுத் தாக்கு தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னாறு அணை உயரத்தை மேலும் 10 அடி உயர்த்த வேண்டும். பால் உற்பத்தியாளர்களது வங்கிக்கணக்கை கூட்டுறவு வங்கிகளிலேயே தொடரச் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர். இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியம், மீன்வளத்துறை, கால்நடை பார மரிப்புத்துறை, ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவ சாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர் புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் இணை இயக்குநர் க.விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சு.ராமதாஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாமிநாதன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறி யாளர் மாது, விவசாய சங்க பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாக்காளர் விபரத்தை நேரில் கள ஆய்வு செய்ய வலியுறுத்தல்
திருப்பூர், அக். 27 – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதி களின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலை யில், வாக்காளர்கள் விபரம் குறித்து நேரடியாக அனைத்துப் பகுதிகளுக்கும் அரசு அலுவலர்கள் சென்று கள ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வரைவு வாக்காளர் பட்டி யலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடி மையம் ஆகியவை குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் தா.ஜெயபால் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை நேரடியாக கள ஆய்வு செய் யும் பணி கடந்த 2001ஆம் ஆண்டுவாக்கில் நடைபெற்றது. அதன்பிறகு ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நேரடி கள ஆய்வு என்பது நடைபெறவில்லை. வாக்குச்சாவடி மையங்கள், சிறப்பு முகாம்கள் மற்றும் இணையவழியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் வாக்காளர்கள் விபரத்தை நேரடியாக கள ஆய்வு செய்து பட்டியலை சரி பார்க்க வேண்டும். அரசு அலுவலர்கள் நேரடியாக இப்பணியில் ஈடு பட்டால்தான் துல்லியமான வாக்காளர் பட்டியலை உரு வாக்க முடியும். அதற்கு மாவட்ட நிர்வாகம், தேர்தல் ஆணை யம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி மற்றும் வடிவேல் ஆகியோர் பேசுகையில், வாக்காளர் சேர்ப்பு குறித்து கூடுதல் விளம்பரம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடி களைக் களைய வேண்டும். ஒரே நபருக்கு இங்கும், அவரது சொந்த ஊரிலும் வாக்கு உள்ளது. இதுபோன்ற இரட்டை பதி வுகள் வாக்குப்பதிவு நாளில்தான் தெரிய வருகிறது. எனவே இந்த விபரங்களை சரிபார்த்து இரட்டைப் பதிவை நீக்க வேண் டும். இறந்தவர்கள் பெயர் நீக்கம், உள்ளாட்சிகளில் இறப்புச் சான்றிதழ் வாங்குவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அந்த பட்டியலை ஒப்பிட்டு இறந்தவர்கள் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதேபோல் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கட் சியினரும், வாக்குசாவடிகளில் விண்ணப்பப்படிவங்கள் கூடு தலாக வழங்க வேண்டும், முகவர்கள் பற்றி தெளிவான விப ரங்களைத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அரசியல் கட்சியினர் கோரிக்கைகளை கேட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கூறினார்.
அரசு சலுகைகளை பயன்படுத்தி சிறு ஜவுளி பூங்கா அமைக்க அழைப்பு
திருப்பூர், அக். 27 – திருப்பூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகை களை பயன்படுத்தி சிறு ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக் கும் திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக் கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள் கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டி டங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறை வானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்ப டும். தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து மாநில அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. இந்த ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டு வதற்கும் வாய்ப்புகள் ஏற்படும். எனவே இத்திட்டத்தின்கீழ் அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்த அனைத்து தொழில் முனைவோரும் முன் வரவேண்டும். இது தொடர்பாக ஆலோசிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் நவம்பர் 1 அன்று பிற்பகல் 4 மணியளவில் கூட்டம் நடைப் பெறவுள்ளது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர் தவறாது கலந்து கொள்ளும்படி ஆட்சி யர் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் அரசின் துணிநூல் துறையின் கீழ் ஜவுளித்தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயற்சி வழங் கப்பட்டு வருகின்றது. இத்திட்டம் தொடர்பான விபரங்க ளுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளாகத் தில் உள்ள மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறையை தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரி வித்துள்ளார்.
வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சனைகள் தீர்வு காண விவசாயிகள் சங்கம் கோரிக்கை
திருப்பூர், அக்.27 - வன உயிரினங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்ச னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார் பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றியச் செயலா ளர் எஸ்.அப்புசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பல வகையான காய்கள், பழங்கள், செடிகளை முளைக்கும் நிலையிலேயே மயில்கள் கொத்தி தின்று சேதப்படுத்துகின்றன. மேலும், மான்களும் வயல்களில் மேய்ந்து பயிர்களை சேதப்படுத்து கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும்இழப்பு ஏற்படுகி றது. மேலும், மயில்கள் மின்சாரக் கம்பியில் பட்டு இறந்து விட்டாலோ, நாய்கள் கடித்து இறந்துவிட்டாலோ நிலங்களின் உரிமையாளர்களே சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் சூழல் உள்ளது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
நவ.1 உள்ளாட்சி தினத்தில் கிராமசபைக் கூட்டங்கள்
திருப்பூர், அக். 27 – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளி லும், உள்ளாட்சி தினமான நவம்பர் 1 அன்று கிராமசபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெ றும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார். எனவே, கிராம மக்கள் இந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவா தித்திடும்படி ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டி ருக்கிறார்.
அடையாளம் தெரியாதவர் கொலை
அவிநாசி, அக்.26- அவிநாசி அருகே சமை யல் மற்றும் உணவு பரிமாற வந்தவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த இருவரை போலீசார் வியா ழக்கிழமை கைது செய்த னர். அவிநாசி அருகே ராக்கி யாபாளையம் பிரிவு அருகே தனியார் திருமண மண்டபம் உள்ளது. இதில், புதன்கி ழமை இரவு நடைபெற்ற விஷேசத்தில், ஈரோடு நசிய னூரைச் சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் ஆனந்தன் என் பவர் மூலம் சமையலர்கள், உணவு பரிமாறுபவர்கள் உள்ளிட்டோர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்க ளில், கரூர் பொகலூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ்( 44), நாமக்கல் சோமசுந்தரம் மகன் சுந்தர மூர்த்தி (49), பெயர், முகவரி தெரியாத மற்றொரு நபர் ஆகியோருக்குள் தகராறு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு மண்டபத்தை விட்டு வெளியேறிய இவர்கள் மோதலில் ஈடுபட்டு, பிர காஷ், சுந்தரமூர்த்தி ஆகி யோர் கல்லால் தாக்கிய தில், அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்துள்ளார்.தக வலறிந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக் குப்பதிவு செய்து பிரகாஷ், சுந்தரமூர்த்தி ஆகிய இரு வரை கைது செய்து விசாரிக் கின்றனர்.
10 மாதமாக ஊதியம் வழங்கவில்லை கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை
தருமபுரி, அக்.27- தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (53). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே நடுப்பட்டியில் கிராம நிர் வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த அக்.18 ஆம் தேதியன்று வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். இதன் பின் அவர், தான் விஷம் அருந்திவிட்டதாக உதவியாளரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து உதவியாளர் சிவலிங்கத்தின் மகன் தட்சிணாமூர்த்திக்கு தகவல் அளித்துள்ளார். இதனிடையே உதவியாளர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சிவ லிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இதன்பின் மேல்சிகிச்சைக் காக ஓசூர் அரசு மருத்துவமனையிலும், சேலம் அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் வியாழனன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தட்சிணாமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் கோபி நாதம்பட்டி காவல் ஆய்வாளர் (பொ) லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிவலிங்கத் துக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்றும், அடிக்கடி பணி இடமாற்றம் செய்வதாகவும், வீடு கட்ட வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மனஉளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள் ளது. எனினும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
ஈரோடு, அக்.27- தீபாவளி பண்டிகை நவ.12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள கடைவீதிகளில் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிக ரிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு போன்ற பகுதிகளில் ஜவுளி கடைகள், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடைபெற அதிகளவில் வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் வகை யில் ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில், ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய வீதிகளில் கண்கா ணிப்பு கோபுரம் அமைத்து அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, மக்கள் நடமாட்டத்தை கண்கா ணித்து வருவார்கள். அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், மாநகர் பகுதியில் தற்போது கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஈரோடு மாநகர போலீசார் கூறுகையில், மாந கரில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் பேருந்து நிலை யம், மேட்டூர் சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா உட்பட 15 இடங்களில் கண்கா ணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒருசில நாட் களில் போலீசார் கண்காணிப்பு கோபுரம் மூலம் மக்கள் நட மாட்டத்தை கண்காணிப்பார்கள், என்றனர்.
காரை தாக்கிய காட்டு யானை
நீலகிரி, அக்.27- உதகை அருகே ஒற்றை யானை காரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டுயானை உலா வருகிறது. இந்நிலையில், மேல் தட்டப்பள்ளம் பகுதியில் வாகனங்கள் போக்கு வரத்து நெரிசல் காரணமாக மேட்டுப்பா ளையம் செல்ல முடியாமல் வாகனங்கள் அணிவகுத்த நின்றன. கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் காரை ஒற்றை யானை சேதப்ப டுத்தியது. அப்போது, காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி யதால் உயிர் தப்பித்தனர். இதனை முன்னாள் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்தனர். கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக ரித்துள்ளது. மேல்தட்டப் பள்ளம் பகுதியில் ஏற்கனவே காட்டு யானை பேருந்து தாக்கி கண்ணாடியை உடைத்தது குறிப்பி டத்தக்கது. இந்நிலையில், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்தல்மலையில் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு
தருமபுரி, அக்.27- வத்தல்மலையில் விடுமுறை நாட்க ளில் வரும் சுற்றுலா பயணிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவ தாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். தருமபுரியிலிருந்து 30 கிலோ மீட் டர் தொலைவில் அமைந்துள்ளது வத் தல்மலை. கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரான சேர்வராயன் மலைப்பகுதி யில் வத்தல்மலை அமைந்திருப்பதால் குளிர்ச்சியாக காணப்படும். இந்த மலையில் சின்னங்காடு, பால்சிலம்பு, பெரியூர் உள்ளிட்ட 7 கிராமங்கள் உள் ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்ற னர். அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. தருமபுரியிலிருந்து அரசு பேருந்து வச தியும் உள்ளது. வத்தல்மலையில் சனத் குமார் நதி உற்பத்தியாகிறது. 24 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து தான் வத்தல்மலைக்கு செல்ல முடி யும். இங்குள்ள மெயின் அருவியான குதிமடுவு அருவியில் குளிப்பதற்கும், இயற்கை அழகை கண்டுகளிப்பதற் கும் வார விடுமுறை நாட்களில் அதிகள வில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு எப்போதும் மிதமான காலநிலை நிலவுகிறது. செப்டம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்ல மிக சிறந்த மாத மாக இருக்கிறது. இந்நிலையில் இங்கு வரும் சிலர் மலைப்பகுதிகளில் மது அருந்தி விட்டு சமூக விரோத செயல் களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து வத்தல்மலையைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், வத் தல்மலைக்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தினங்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி களவில் மக்கள் வந்து செல்கின்றனர். அதிலும் அதிகளவில் இளைஞர்கள் வந்து அருவிகளில் குளித்து செல்கின்ற னர். இந்நிலையில், வாலிபர்கள் வனப் பகுதியில் மது அருந்திவிட்டு மது பாட் டில்களை அங்கேயே போட்டு செல்கின்ற னர். இதனால் அங்கு அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடக்கின்றன. மது அருந்துபவர்கள் இருசக்கர வாகனங்க ளில் சென்று கொண்டை ஊசி வளைவு களில் போதையில் விபத்தை ஏற்படுத்து கின்றனர். சில மாதங்களில் 10க்கும் மேற் பட்ட விபத்துகளும், அதில் 2 பேர் உயிரி ழந்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. இதனிடையே, கடந்த 6 மாதங்க ளுக்கு முன்பு வரை வத்தல்மலைக்கு கீழே சோதனைச்சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். அப் போது மது பாட்டில்களுடன் மலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்க ளின் எண்ணிக்கை குறைந்தது. தற் போது சோதனைச்சாவடி மூடிக்கிடக் கிறது. கண்காணிப்பு பணியில் போலீசா ரும் இல்லை. இதனால் வத்தல்மலைக்கு சுற்றுலா பயணிகள் எனும் போர்வை யில் சமூக விரோதிகள் வந்து பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே, மீண் டும் வத்தல்மலைக்கு செல்லும் மலை அடிவாரத்தில் சோதனைச்சாவடியை திறந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், என்றனர்.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, அக்.27- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவ சாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி வியாழனன்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ பட் டுக்கூடு அதிகபட்சமாக ரூ.580க்கும், குறைந்தபட்ச மாக ரூ.300க்கும், சராசரி யாக ரூ.445.09க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.19 லட்சத்து 67 ஆயிரத்து 744க்கு ஏலம் நடைபெற்றதாக ஏல அதிகாரிகள் தெரிவித்தனர். ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.