உடுமலை, ஜன.29- திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பண்ணை கிணறு ஊராட்சி யில் கோழி குட்டை, ஜல்லிப்பட்டி கிரா மங்களில் மகளிர் உரிமை தொகை வழங் குவதில் பாரபட்சம் நடைபெற்று வருவ தாக கூறி, பொதுமக்கள் உடுமலை வட் டாட்சியர் அலுவலகத்தை திங்கட்கி ழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத் தினர். கிராமங்களில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் பாரபட்சம் காட் டப்படுவதாக பலமுறை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் முறை யிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத தால் உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தை நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் முற் றுகையிட்டனர். இதுகுறித்து பெண்கள் கூறியதா வது, மகளிர் உதவித் தொகை எங்கள் கிராமத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடைக்காமல் உள் ளது. ஆனால் வருமான வரி செலுத் தும் பலருக்கு கிடைக்கிறது. மேலும், இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் உரியப் பதில் அளிக்கவில்லை. ஆகையால், ஏழை எளிய மக்களுக்கு முறையாக கள ஆய்வு செய்து மகளிர் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்து வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டதாக தெரிவித் தனர். இதையடுத்து உடுமலை வட்டாட் சியர் சுந்தரத்திடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.