திருப்பூர், டிச.3 - திருப்பூர் மாவட்டம் கே .2092 செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத் திறனாளி கள் தினத்தை ஒட்டி மாற்றுத் திறனாளிகள் நான்கு பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. சனிக்கிழமை மாற்றுத் திறனாளிகள் நான்கு நபர்களுக் கும் தலா ரூ. ஐம்பதாயிரம் வீதம் கடன் தொகை வழங்கப்பட் டது. இந்நிகழ்வில் கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.ராமசாமி, துணைத் தலைவர் ஏ.பி.சுப்பிரமணியம், நிர்வாக குழு உறுப்பி னர் கே. மாரப்பன், கூட்டுறவு சங்கச் செயலாளர் எஸ்.சுந்தர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.