சேலம், பிப்.22- அரசு மோட்டார் வண்டிகள் பரா மரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கத் தின் வைரவிழா மாநாடு, சேலத்தில் சனியன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டி கள் பராமரிப்பு நிறுவன தொழிலா ளர் சங்கத்தின் வைரவிழா மாநாடு, சேலத்தில் சனியன்று நடைபெற் றது. முன்னதாக, கோட்டை மைதா னத்திலிருந்து பேரணி துவங்கியது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர் சங்க மாநில துணைத்தலைவர் வெ.அர்த்தனாரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கோட்டை பகுதியிலுள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாநி லத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சி.முருகபெரு மாள் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். வரவேற்புக்குழு தலைவர் சி. ராஜ்குமார் வரவேற்றார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் ஆர்.பாலசுப் பிரமணியம் துவக்கவுரையாற்றி னார். தமிழ்நாடு சுகாதார போக்கு வரத்து ஊழியர் சங்க மாநிலத் தலை வர் டி.ராஜாமணி, பொறியியல் மற் றும் கல்லூரி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் பா.மனோகரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், பணியாளர் சீர மைப்புக்குழுவின் வாய்மொழி பரிந் துரையை புறம் தள்ளி, காலியாக உள்ள தொழில்நுட்ப பதவி உயர்வு பணியிடங்கள் மற்றும் அமைச்சு பணியாளர் பதவி உயர்வு பணியி டங்கள் ஆகியவற்றை முழுமையாக நிரப்ப வேண்டும். பழுதடைந்துள்ள பணிமனைகளை சீரமைத்து, தொழி லாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரி யும் நிலையை உருவாக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கே.கங்காதரன் நிறைவுரையாற்றி னார். வரவேற்புக்குழு செயலாளர் பி. சுரேஷ் நன்றி கூறினார்.