districts

img

அரசியல் கட்சி பெயர்களில் டிசர்ட்

திருப்பூர், மார்ச் 21- தேர்தல்களின்போது அரசியல் கட்சி பெயர்களில் டிசர்ட்  தயாரிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிக ளில் நடைபெறும் பிரசாரப் பயணங்களுக்கு தேவையான டிசர்ட்கள் திருப்பூரில் கொள்முதல் செய்யப்பட்டு வருகி றது. தேர்தல்களின்போது தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்  பா.ஜ.க., போன்ற கட்சியினர் மாநிலம் முழுவதும் பயன்ப டுத்த திருப்பூர் கட்சியினர் மூலம் டி சர்ட் தயாரிப்பார்கள். தற் போது பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறு கிறது. இதையொட்டி பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித் துள்ளனர். இந்நிலையில் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளதையடுத்து திருப்பூர் பனி யன் நிறுவனங்களில் பிரசாரத்திற்காக தயாரிக்கப்பட்டு இருந்த பனியன்களில் கட்சி  கொடி, சின்னம், தலைவர் படங்கள் அச்சிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகி றது.