districts

img

தாராபுரத்திற்கு மாவட்ட தலைமை மருத்துவமனை கோரி ஆர்ப்பாட்டம்

தாராபுரம், மே 16 - தாராபுரத்தில் மாவட்ட தலைமை மருத் துவமனை அமைக்க கோரி அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தி லுள்ள தாராபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங் களில் உள்ள வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது. இச்சூழலில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் திருப்பூர்  மாவட்டத்திலுள்ள காங்கயம் அரசு மருத் துவமனை மாவட்ட தலைமை அரசு மருத் துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  இது தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தாரா புரத்தில் மாவட்ட தலைமை மருத்து வமனை அமைக்கப்படும் என அறிவித்து அதனை காங்கயத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் சார் பில் தாராபுரம் அண்ணாசிலை முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க நிர் வாகி சிவக்குமார் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்களை சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டனர்.