திருப்பூர், பிப்.14- நகராட்சி மண்டல நிர்வாக இயக் குநரின் ஊழியர் விரோத பழிவாங் கும் நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் நகராட்சி மண்டல நிர் வாக இயக்குநர் அலுவலகம் முன் பாக திங்களன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏ.ராணி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் மா.பால சுப்பிரமணியம் கோரிக்கையை விளக்கிப் பேசினார். இதில், காங் கேயம் நகராட்சியில் குழாய் பொருத்தநராக இருக்கும் லோ. செல்வக்குமாரை பழி வாங்கும் நோக்கத்தில் வழங்கப்பட்ட பணி யிட மாறுதல் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டத்தில் முழக்கம் எழுப் பப்பட்டது. இதில் மாவட்டத் துணைத் தலை வர்கள் எஸ்.முருகதாஸ், எம்.ராம சாமி, எம்.எஸ்.அன்வருல்ஹக், பி. பாக்கியம், மாவட்ட இணைச் செய லாளர் ஆர்.ராமன், ஏ.ராஜேஸ்வரி, எம்.மேகலிங்கம், தா.வைரமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினர். நிறைவாக மாநில துணைத் தலை வர் சி.பரமேஸ்வரி கண்டன எழுச்சி யுரை ஆற்றினார். முடிவில் மாவட் டப் பொருளாளர் செ.முருகசாமி நன்றி கூறினார்.