districts

img

ஊரக வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது

நாமக்கல் ஜூன் 28-  ஊரக வேலை திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணி களுக்கு பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, பல்வேறு பகுதிகளில் அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்டத்தை 150  நாட்களாக நிறைவேற்றிட வேண் டும். தினசரி கூலியான ரூ.281 லிருந்து மாநில அரசின் பங்காக  ரூ.100 சேர்த்து வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தில் ஒதுக்கப் பட்ட நிதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது. தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி  திட்டத்தை தொடர்ந்து செயல்ப டுத்த வேண்டும். கிராமப்புறங்க ளில் வாடகை வீட்டில் குடியிருப்ப வர்கள், இரண்டு மூன்று குடும்பங் களாக ஒரே வீட்டில் கூட்டுக் குடும் பமாக உள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநிலம் முழுவதும் கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதன்ஒருபகுதியாக நாமக் கல் மாவட்டம், குமாராபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொருளாளர் ஆர்.குருசாமி தலைமை தாங்கினார். இதில், மாவட்டத் தலைவர் ஏ.சி.துரை, ஒன்றிய துணை தலைவர் மகேஸ் வரி, ஒன்றிய துணைச் செயலாளர் லோகாம்பாள், கிளை செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வி.பி சபாபதி தலைமை தாங்கினார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் நீலா, சுந்தரம், கமலம் ஆகியோர்  கலந்து கொண்டனர். சேந்தமங்க லத்தில் ஒன்றிய செயலாளர் செல் லம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய  உதவி தலைவர் ராஜாமணி, உதவி செயலாளர் செல்வி, உதவி செய லாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி வட்டார வளர்ச்சி  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலை வர் பி.ரவி தலைமை தங்கினார். இதில், மாவட்ட துணை செயலா ளர் கே.கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் டி.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், என்.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து, ஒன்றிய செய லாளர் என்.கந்தசாமி, வாலிபர் சங்க வட்ட தலைவர் பெரியசாமி, மாதர் சங்க நிர்வாகி கே.சுசிலா  ஆகியோர் வாழ்த்தி பேசினர். தருமபுரி மாவட்டம் அரூர் வட் டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றிய தலைவர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் ஜடை யாண்டி, பி.வீரப்பன், சொக்கலிங் கம் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர். 

பொள்ளாச்சி

கோவை மாவட்டம், ஆனை மலை முக்கோணம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க  தாலுகா செயலாளர் கே.ஏ.பட்டீஸ் வரமூர்த்தி தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஏ.துரைசாமி, தாலுகா  துணைச்செயலாளர் ஏ.முத்துச் சாமி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசி வம், துணைச்செயலாளர் சி.சஞ் சீவி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.


 

 

;