districts

img

ஊரக வேலைத் திட்டத்தை சிதைக்காமல் செயல்படுத்த கோரி

அவிநாசி, ஜூன் 28– ஊரக வேலைத் திட்டத்தை சிதைக்கா மல் செயல்படுத்தக் கோரி திருப்பூர் மாவட் டத்தில் ஏழு மையங்களில் ஒன்றிய அலுவல கங்கள் முன்பாக செவ்வாயன்று அகில  இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வேலைத் திட்டத்தினை சிதைக்கா மல் செயல்படுத்தவும், திமுக அரசு தேர்தல்  வாக்குறுதிப்படி 100 நாள் வேலைத்திட் டத்தை 150 நாளாக உயர்த்தவும், தினக்கூலி  மாநில அரசு பங்காக ரூ. 100 சேர்த்து ரூ. 381ஆக உயர்த்தி வழங்கவும், தொழிலாளர் கள் காலை 7 மணிக்கு பணியிடத்திற்கு வர  நிர்பந்திப்பதை கைவிடவும், வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்க ளுக்கும் முழுமையாக வேலை நாட்கள் அளிக்கவும், ஊரக வேலைவாய்ப்புத் திட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு கட்டு மானப் பணிகளுக்கு பயன்படுத்தி வேலை வாய்ப்பை பறிப்பதை கைவிடவும், தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி  திட்டத்தை தொடரவும் வலியுறுத்தி அகில  இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர்  போராட்டம் அறிவித்தனர். அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய  நிர்வாகி மல்லப்பன், முருகேஷ், விவசாய  சங்க மாவட்ட நிர்வாகி வெங்கடாசலம்,  விவசாய சங்க ஒன்றிய நிர்வாகி முத்துரத்தி னம், சிஐடியு மாவட்ட நிர்வாகி ஈஸ்வர மூர்த்தி, சிஐடியு ஒன்றிய நிர்வாகிகள் ராஜ்,  வேலுச்சாமி, ஆப்பரேட்டர்  சங்க மாவட்ட  நிர்வாகி பழனிச்சாமி உட்பட முக்கிய நிர்வா கிகள் பலர் கலந்து கொண்டனர். உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு  சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் சி.முத்து சாமி தலைமை வகித்தார்.மாவட்டச் செய லாளர் ஏ.பஞ்சலிங்கம், எம்.ரங்கராஜ், சுப்பு லட்சுமி, பி.எஸ்.சுந்தரம், ஆர்.சுந்தரம் ஆகி யோர் உரையாற்றினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் கி.கனகராஜ், சிஐடியு நிர்வாகி சுதா சுப்பி ரமணியம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்  இப்போராட்டத்தில் 250க்கும் மேற்பட்ட ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஊத்துக்குளியில் சங்கத்தின் தாலுகா தலைவர் ஆர்.மணியன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் 30-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பிரகாஷ் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். விவசாய சங்க  மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மார்க் சிஸ்ட் கட்சி ஊத்துக்குளி தாலுகா செயலா ளர் எஸ்.கே.கொழந்தசாமி, சி.ஐ.டி.யு நிர் வாகி வி.கே.பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மடத்துக்குளம் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேலு, சி ஐ டி யூ நிர்வாகி பன் னீர்செல்வம், விவசாயிகள் சங்க நிர்வாகி  முத்துசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். பொங்கலூரில் சங்கத்தின் ஒன்றிய செய லாளர் ஜி.சுந்தரம் தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் 80க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். பனியன் சங்க  பொதுச் செயலாளர் ஜி.சம்பத், மார்க்சிஸ்ட்  கட்சி ஒன்றிய செயலாளர் பாலன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர்.

குடிமங்கலத்தில் விவசாய தொழிலா ளர் சங்க கமிட்டி உறுப்பினர் எஸ்.பாப்பாத்தி  தலைமையில் 100 நாள் வேலை திட்ட தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். விவசாய சங்கத் தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு கைத்தறி சங்க மாவட்ட செயலா ளர் என் கனகராஜ் தலைமை வகித்தார். இதில் விவசாயத் தொழிலாளர்கள் திரளான வர்கள் கலந்து கொண்டனர். அனைத்து இடங்களிலும் நடைபெற்ற இந்தப் போராட்டங்களை தொடர்ந்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத் தப்பட்டது. இதில் கட்டாயம் காலை 7 மணிக்கு பணி இடங்களில் இருக்க வேண்டும், ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வேலைக்கு வர வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விலக்கிக் கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதர கொள்கை சார்ந்த பிரச்சனைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதா கவும் தெரிவித்தனர்.

;