districts

img

பாகுபலிக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம்

மே.பாளையம், ஜூன் 28- பாகுபலி யானை இருப் பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ளுவதால், சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட் டுள்ளது. கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சுற்றித்திரியும் பாகு பலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை. இதன் வாய்ப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிவதை கடந்த 21ஆம் தேதி வனத்துறை யினரால் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, கும்கி யானைகளின் உதவியோடு பாகு பலி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளிக்க வனத்துறை திட்டமிட்டனர். இதற்காக முதுமலை முகாமில் இருந்து விஜய் மற்றும் நசீம் என இரு கும்கி யானைகள் கடந்த 22ஆம் தேதியன்று நள்ளிரவு லாரிகள் மூலம் வந்த டைந்தன. இந்த கும்கி யானைகள் வனத்துறைக்கு சொந்த மான மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கு வளாகத்தில் தனித்தனியாக கட்டி வைக்கப்பட்டன.  கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக கும்கி யானைகள் தயார் நிலையில் இருந்தாலும், பாகுபலி யானையை மட்டும் வனத்துறையினரால் திட்டமிட்டபடி நெருங்க இயலவில்லை.  அடிக்கடி தனது இருப்பிடத்தை வேகமாக மாற்றியபடி இருப்பதால் அதனை ஓரிடத்தில் சுற்றி வளைத்து கும்கி யானைகளின் உதவியோடு மயக்க ஊசி செலுத்தி பாகு பலிக்கு சிகிச்சையளிப்பது சவாலான காரியமாக இருக் கின்றது. பல குழுக்களாக பிரித்து வனத்துறையினரின் தேடு தல் வேட்டையும் தொடர்கிறது.  இதற்கிடையே, ஒரே இடத்தில நிறுத்தி வைக்கப்பட்டு கும்கி யானைகள், தங்களை கட்டி வைத்துள்ள இடத்தை  சுற்றியுள்ள மரங்களை சாய்ப்பது, அதன் கிளைகளை முறிப் பது, மண்ணை வாரி இறப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. மர நிழலில் தான் கும்கி யானைகளை நிறுத்த வேண்டும் என்பதால் மரத்தடியில் நிறுத்தப்பட்டுள்ள கும்கி  யானைகள் தங்களது துதிக்கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள மரங்களை முறித்து வருகின்றன.