திருப்பூர், மே 12 - திருப்பூரில் பள்ளிக் கல்வித் துறையின் கணினி சர்வர் பிரச்சனை காரண மாக 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மதிப் பெண் சான்றிதழ் வழங்கும் பணியில் கால தாமதம் ஏற் பட்டது. தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ. மாண வியர்களுக்கு தேர்வு முடிவு கள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவ, மாணவிகள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெள்ளியன்று முதல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், காலை முதல் சர்வர் கோளாறு காரணமாக மதிப்பெண் சான்றிதழ்களை பதி விறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் நீண்ட நேரம் காத்திருந்தனர். பல மணி நேரம் தாமதத் திற்குப் பிறகு, மதியத்திற்கு மேல் மாணவ, மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் மற்றும் அவர்களுடன் வந்திருந்த பெற்றோர் நீண்ட நேரம் காத்தி ருக்கும் சூழல் ஏற்பட்டது.