வால்பாறை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில்
பொள்ளாச்சி, அக்.25- வால்பாறை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பிளவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழி யாக செல்லும் வாகன ஓட்டிகள் அச் சத்துடனே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த வால்பாறை தாலுகா பகுதியில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சோலையார் அணை மற்றும் பரம்பிக்குளம், பாலாஜி கோவில் உள்ளிட்ட ஏராள மான சுற்றுலாத் தளங்களும், இயற்கை எழில்கொஞ்சும் பசுமை யான வனப்பகுதிகளையும் கொண் டுள்ளது. இதனைக் கண்டுகளிக்க தமி ழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலி ருந்தும் ஆயிரக்கணக்கில் நாள் தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், வால்பாறை பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தேயிலைத் தோட்டங்களில் சுமார் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இத்தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தார் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் வால்பாறையிலிருந்து மற்ற பகுதிக ளுக்கு செல்லவும், மற்ற பகுதியிலி ருந்து வால்பாறை பகுதிக்கு வரவும் பொள்ளாச்சி - வால்பாறை நெடுஞ் சாலை மட்டுமே ஒரே வழியாகும். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் வால்பாறை உள்ளிட்ட பல இடங்களில் நிலச் சரிவுகள் ஏற்பட்டது. இதில், பொள் ளாச்சி - வால்பாறை செல்லும் நெடுஞ் சாலையோரங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் பல இடங் களில் சாலைகளில் பெரும் பிளவுகள் ஏற்பட்டது. இதனையடுத்து சேத மடைந்த சாலைகளை செப்பனிடு வதற்கு தனியார் ஒப்பந்ததாரர்களின் மூலமாக பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இப்பணிகள் தற்போது முடி வடைந்துள்ள நிலையில், அப்பணி கள் தரமாக மேற்கொள்ளப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந் துள்ளது. குறிப்பாக, வால்பாறை வில்லோனி எஸ்டேட் செல்லும் வழியில் சாலைகளில் காணப்படும் பிளவுகளால் அப்பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அப்பகுதியை அச்சத்துடன் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வால்பாறை தேயி லைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் பி.பரம சிவம் கூறுகையில், பொள்ளாச்சி முதல் வால்பாறை வரை அமைக் கப்பட்ட மாநில நெடுஞ்சாலையானது வால்பாறையை இணைக்கின்ற முக்கிய வழித்தடமாகும். இங்கு கடந்த காலங்களில் பெய்த கனமழை களின் போது நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப் பட்டது. இதனையடுத்து தனியார் ஒப்பந்ததாரர்களின் மூலமாக பழு தடைந்த சாலைகளை செப்பனிடும் பணிகள் தொடங்கப்பட்டது. தற் போது இப்பணிகள் நிறைவடைந் துள்ள நிலையில் வால்பாறை செல் லும் வழியில் உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதி மற்றும் சேக்கல் முடி, உருளிக்கள், பழைய வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் அபாயக ரமான வகையில் பிளவுகள் ஏற் பட்டுள்ளது. தமிழ்நாடு - கேரளா இணைக்கின்ற முக்கிய வழித்தட மான சாலக்குடி பகுதியிலும் சாலை களில் பல இடங்களில் பிளவுகள் ஏற் பட்டுள்ளது. இதனால் இவ்வழித்தடங் களில் பயணிக்கின்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாது காப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஆகவே, தமிழக அரசு இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, பொதுமக்க ளின் பாதுகாப்பு தொடர்புடைய இது போன்ற முக்கிய பணிகளில் அரசியல் இலாபம் கருதி அனுபவமில்லாத தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு சாலை பராமரிப்பு பணிகளை வழங்குவதும், அப்பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கூட தமிழக அரசு கண்டுகொள்ளா மலிருப்பதும் பொதுமக்களின் உயி ருக்கு ஆபத்தாக அமையலாம். எனவே, வால்பாறை மக்களின் நல னைக் கருத்தில் கொண்டும், சுற்றுலா பயணிகளின் ஆபத்திலுள்ள பய ணத்தை உறுதி செய்யவும் பாதுகாப் பான சாலைகளை தமிழக அரசு ஏற் படுத்தி தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
(ந.நி)