வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு சிபிஎம் சார்பில் திருவிக நகரில் நடைபெற்ற இருசக்கர வாகன பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதில் பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், நிர்வாகிகள் கே.சுரேஷ், என்.மோகன், பா.தேவி, கே.முருகேசன், பி.கிருஷ்ணன், எம்.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.