districts

img

அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஜூன் 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றியக்குழு  சார்பில் திங்களன்று அக்னிபாத் திட்டத்தைக் கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத் திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ப்பதாக ஒன்றிய  அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து  வட மாநிலம் ,தமிழகம் உட்பட பல இடங்களில் அக்னிபாத்  திட்டத்தை எதிர்த்து வலுவாக இளைஞர்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் சேவூர் செல்லும் சாலையில், அக்னிபாத் திட்டத்தைக் கைவிடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலா ளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோ பால் மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழனிச் சாமி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.