districts

img

கொல்லிமலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜன. 5- கொல்லிமலையில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர் களும், தங்களின் கிராமங்களில் தங்கி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் கொல்லிமலையில் பரவலான பகுதி களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த  மற்றும் முன்னணி தலைவர்கள் எஸ்.கே.ஆண்டி, எஸ்.சி. பாலையா, இ.பன்னீர்செல்வம். சி.ரேவதி. கே.சின்னையன்.  வி.எஸ்.மணி, பழனிசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்த னர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஏ.டி.கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றினர்.