districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மார்ச் 5 கோவையில் தொழில் பாதுகாப்பு மாநாடு: சிபிஎம் நடத்துகிறது

கோவை, ஜன. 31- சிறு, குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க மார்ச் 5  ஆம்தேதி கோவையில் தொழில் பாதுகாப்பு மாநாடு நடத்து வது என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு கூட்டம், செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் தலை மையில் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பங்கேற்றார். இதுகுறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஒன்றிய அரசின் மக் கள் விரோத நடவடிக்கை, கார்ப்ரேட் ஆதரவு கொள்கையின் காரணமாக நாடு முழுவதும் சிறு,குறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஜிஎஸ்டி, மூலப் பொருட்கள் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பல ஆயிரக் கணக்கான தொழில்கூடங்கள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தி லும், குறிப்பாக கோவை உள்ளிட்ட தொழிற்கேந்திரமான மாவட்டத்தில் இதன் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. வேலை கொடுத்தவர்கள், வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட் டுள்ளது. இதன் காரணமாக வேலையிண்மை அதிகரித்து, நெருக்கடி முற்றும் நிலையில் உள்ளது. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், சிறு,குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க ஒன்றுபட்ட குரலை எழுப்ப வேண்டும் என்கிற முன் முயற்சி யுடன் கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி இந்த தொழில் பாது காப்பு மாநாட்டை மார்ச் 5 ஆம் தேதி நடத்துகிறது. இம்மாநாட் டில், கேரள தொழில் துறை அமைச்சர் ரஜீவ், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ் ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மா நாட்டில், தற்போதைய தொழில் நிலை, மேம்படுத்துவ தற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரலாம் என காவல் துறை அழைப்பு

தருமபுரி, ஜன.31- நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரலாம் என காவல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு எம்ஜி சாலை, ஸ்ரீஸ்ரீஜெய்கணபதி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, அந்த நிதி நிறுவனத்தில் வைப்பு தொகை பெற்றும், மாதாந்திர ஏலச் சீட்டு, மற்றும் சிறு சேமிப்பு திட்டம் ஆகியவைகளை நடத்தி பண  மோசடி செய்துள்ளதாக சேலம் பொருளா தார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டு வழக்கு புலன் விசார ணையில் உள்ளது. மேற்படி ஸ்ரீஸ்ரீஜெய்கண பதி பைனான்சில் மாதாந்திர ஏலச்சீட்டு, வைப் புத்தொகை மற்றும் சிறு சேமிப்பு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் உடனடியாக தருமபுரி பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் தங்கள் வசம் உள்ள  அசல் ஆவணங்களுடன் எழுத்து மூலமாக புகார் கொடுக்கலாம். அலுவலக முகவரி: காவல் ஆய்வாளர், பொருளாதார குற்றப் பிரிவு, வள்ளுவர் நகர், ஒட்டப்பட்டி, தரும புரி. இவ்வாறு பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தாய், மகன் தற்கொலை முயற்சி

சேலம், ஜன.31- தங்களது நிலத்தை மீட்டுதர வேண்டும் என வலியு றுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகன் தீக் குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் செ.கார் மேகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது, வீராணம் பகுதியைச் சேர்ந்த மோகனா, அவருடைய மகன் கோவிந்த ராஜ் ஆகியோர் இருவரும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு  கொடுக்க வந்தனர். திடீரென இருவரும் தங்களது உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதைய டுத்து அங்கிருந்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த டீசல் கேனை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து அவர்களை அப்புறப் படுத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு  ொந்தமான 30 சென்ட் நிலத்தை உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் சேர்ந்து அபகரித்துக்கொண்டனர். அந்த நிலத்தை மீட்டுத்தரும்படி அம்மாபேட்டை காவல் நிலையத் தில் புகார் அளித்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலை யில், நிலத்தை பறித்துக்கொண்டவர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண் டும் எனக்கூறி கண்ணீர் வடித்தனர்.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

தருமபுரி, ஜன.31- பாலக்கோடு அருகே கொள்முதல் நிலையம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எர்ரன அள்ளி ஊராட்சி, பி.கொல்லஅள்ளியில் பால் உற்பத்தியா ளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத் திற்கு 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பால் வழங்கி வரு கின்றனர். கடந்த 3 வாரங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு சங்கத்திலிருந்து பணம் வழங்கப்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி  செய்ய முடியாமலும், கால்நடைகளுக்கு தேவையான தீவ னங்களை வாங்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். இத னால் ஆவேசமடைந்த பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதில், உடன்பாடு ஏற்பட்ட தால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது 

கோவை, ஜன. 31- கோவையில் போதை மாத்திரை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை பெரிய கடை வீதி காவல் நிலைய எல் லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார்  ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப் போது வைசால் வீதி  அருகே சந்தேகத்திக்கிடமான வகை யில் சுற்றிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசா ரிக்கையில், நவ்சாத் என் கிற இவர் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.  இவரிடமி ருந்து நைட்ரோஜன் உள் ளிட்ட 46 போதை  மாத்திரை களை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

குளக்கரையில் கழிவு கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக

உடுமலை, ஜன.31- உடுமலை அருகே உள்ள குளக்கரை பகுதியில் கழிவு களை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விவ சாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.  உடுமலை - மூணாறு செல்லும் சாலையில் அமைந் துள்ளது அண்ணாநகர். இப்பகுதியையொட்டி  உள்ள பெரிய  குளம் சுமார் 404 ஏக்கர் பரப்பளவில், அதிக நீர் கொள்ளளவு  கொண்டதாகும். இந்த குளத்தின் நீரால் விவசாய மட்டு மின்றி, சுற்றுவட்டார ஐந்து கிலோ மீட்டருக்கு நிலத்தடி  நீர் மட்டம் உயர்வுக்கும், குளத்தின் அருகே அமைக்கபட்டு  வுள்ள ஆழ்குழாய் கிணற்றின் நீராதரமாக விளங்குகிறது.  இதனால் குரல்குட்டை ஊராட்சிக்கு குடிநீர் வழங்கப்படு கிறது. இக்குளத்தில் வளர்க்கப்படும் மீன்கள், இப்பகுதி மக்க ளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகிறது.  இந்நிலையில், மூணாறு சாலையில் உள்ள மரம் சம்மந்தப் பட்ட பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில்  பயன்படுத்தும் பெயின்ட் மற்றும் மரக்கழிவுகளை குளத்தின் கரையிலும், மதகு பகுதியிலும் கொட்டப்படுகிறது. பின்னர் தீ வைத்து  எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது.  எனவே, குளத்தில் மரக்கழிவுகள் கொட்டுபவர்கள் மீது  மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுபாட்டு வாரியம் நடவ டிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர். 

ஓபிஎஸ் - ஈபிஎஸ்சை பிரித்து பாஜக வேடிக்கை பார்க்கிறது: பார்வர்டு பிளாக் கட்சி குற்றச்சாட்டு

திருப்பூர், ஜன.31- ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் பிரித்து பாஜக வேடிக்கை பார்க்கிறது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய துணைத்தலைவர் கதிரவன் குற்றம்சாட்டினார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் கதிரவன் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்ட ணிக்கு ஆதரவாக பிப்.15 மற்றும் 16 ஆம் தேதிகளில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும். அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரை பிரித்து பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சி கள் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணியை வலுப்படுத்தி ஆட்சி அமைக்க வேண்டும். ஒன் றிய அரசு பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க நூல் வரியை ரத்து செய்ய வேண்டும், என்றார்.

தேயிலை தொழிலாளர்கள் போராட்டம்

உதகை, ஜன.31- பந்தலூர் அருகே தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நெல்லியாளம் தேயிலை தொழிற் சாலையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள நெல்லியாளம் அரசு தேயிலை தொழிற்சாலையில் ஏராளமான கூலி தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை இலை உற்பத்தி குறைந்துள் ளது. இதனால், தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை இலை வரத்து குறைந்துள்ளதால், தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணியாற் றிய நிரந்தர தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் பணி யாற்றி வருகின்றனர். ஆனால் தற்காலிக தொழிலாளர்க ளுக்கு பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் ஆவேசமடைந்த தற்காலிக தொழிலாளர்கள்  பணிநிரந்தரம் செய்யக்கோரி தொழிற்சாலை முன்பு அமர்ந்து  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்த சேரம்பாடி காவல் ஆய்வாளர் அமுதா தலைமையி லான காவல் துறையினர் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது போலீசார், தொழிற்சாலை நிர்வாகிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த னர். இதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வெற்றிலை விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி, ஜன.31- கடத்தூர் மார்க்கெட்டில் வெற்றிலை விலை அதிகரித்துள்ளதால், விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், கடத்தூரில் வெற் றிலை மார்க்கெட் வாரந்தோறும் கூடும். இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது கடும் பனிப்பொழிவு நிலவு வதால் வெற்றிலை விளைச்சல் பாதிக் கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில  வாரங்களாக மார்க்கெட்டுக்கு வெற் றிலை வரத்து குறைந்து வருகிறது. இத னால் விலை தொடர்ந்து உயர்ந்து வரு கிறது. கடந்த வாரம் 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.22 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த  வாரம் வெற்றிலை விலை மேலும் அதி கரித்தது. ஒரு மூட்டை வெற்றிலை குறைந் தபட்சமாக ரூ.22 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனை யானது. வரத்து குறைவு மற்றும் திரு மண நாட்கள் என்பதால் தேவை அதிக ரித்து வெற்றிலை விலை மிகவும் உயர்ந் துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர். சமீப காலத்தில் இவ்வளவு கூடுத லான விலை கிடைக்காத நிலையில். விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.

பருத்தி ஏலம்

தருமபுரி, ஜன.31- தருமபுரி, அரூர் கூட்டு றவு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் சங்கத்தில் திங்க ளன்று பருத்தி ஏலம் நடை பெற்றது. இதில் அரூர், கம்பை நல்லூர், கோட்டப்பட்டி உள் ளிட்ட பகுதிகளிலிருந்து  780க்கும் மேற்பட்ட விவசா யிகள் 4 ஆயிரத்து 600 பருத்தி மூட்டைகளை கொண்டு வந் தனர். இதில், ஆர்சிஎச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 796 முதல் ரூ.8  ஆயிரத்து 509 வரை ஏலம்  போனது. இதன்படி ரூ.1 கோடியே 30 லட்சம் பருத்தி ஏலம் போனது என செயலா ளர் தெரிவித்தார்.

சேலம் - ஓமலூர் இடையே அகல ரயில்பாதை 121 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை

சேலம், ஜன.31- சேலம் – ஓமலூர் இடையே அமைக்கப்பட்டுள்ளன அகல ரயில்பாதையில் 121 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. சேலம் - பெங்களூரு இடையே அகல ரயில்பாதை அமைக்கப்பட்ட போது, சேலம் - ஓமலூர் இடையேயான மீட்டர்  கேஜ் ரயில் பாதையில், அகல ரயில் பாதை விரிவுப்படுத் தும் பணி மேற்கொள்ளப்படாமல் அந்த பாதையின் அருகே  புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதனால் ஜங் ஷன் ரயில் நிலையம் முதல் ஓமலூர் ரயில் நிலையம் வரை  உள்ள 12 கிலோமீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை  போதிய பயன்பாடின்றி இருந்தது. இதையடுத்து சேலம் -  ஓமலூர் இடையே இருவழி ரயில் பாதை திட்டத்தின் கீழ்  ஏற்கனவே உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக்கிட ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணி தற்போது  நிறைவு பெற்றுள்ளது. மின்வழிப்பாதையாக உருவாக்கப் பட்டுள்ள இந்த அகல ரயில் பாதையை ஆய்வு செய்யவும், அந்த பாதையில் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் நடத்த வும் திட்டமிடப்பட்டது. அதன்படி, புதிதாக அமைக்கப்பட்ட இந்த அகல ரயில் பாதையில் ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே பாது காப்பு ஆணையர் ஏ.கே.ராய், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத் திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரயில் பாதையை ஆய்வு செய்தார். அதன்பிறகு ஓமலூர் ரயில் நிலையம் சென்ற டைந்தனர். இதையடுத்து ஓமலூர் - சேலம் இடையே ரயில் சோதனை ஓட்டம், ஓமலூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட் டது. இந்த ரயிலில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி னர். ரயில் அதிகபட்சமாக 121 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஓமலூர் - சேலம் இடையே 12 கிலோமீட்டர் தூரத்தை 9 நிமிடத்தில் கடந்து சேலத்தை வந்த டைந்தது. இந்த ஆய்வின்போது தலைமை கட்டுமான நிர்வாக அதி காரி சி.கே.குப்தா, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ், கோட்ட தலைமை பொறியாளர் ராம் கிஷோர், ஒப் பந்ததாரர்கள் கவுதமன், அன்பரசு, கட்டுமான துணை முதன்மை அதிகாரி கமல்ராஜ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரி கள் உடனிருந்தனர்.





 

;